Thursday, January 28, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

Oredesam by Oredesam
April 22, 2020
in ஆன்மிகம்
0
574
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

READ ALSO

இன்று சனி மஹாப்பிரதோஷம்!

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!! இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.

“இத்தல இறைவர் தீண்டா திருமேனியாக எழுந்தருளியுள்ளார்”, அம்பாள் வழிபட்ட தலம், சந்திரன் தேவர்கள் பூசித்த பதி

இவருக்கு “பாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், பாசசூருடையவர், பாசூர்நாதர்” என்னும் நாமங்கள் உண்டு

விநாயகர் திருச்சபை, விலங்கிட்ட காளியம்மை, வினைதீர்த்த ஈஸ்வரர் என்னும் மூர்த்தங்கள் கண்டு தொழவேண்டிய அற்புதங்கள்

“பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூர், பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூர் என்றெல்லாம் பிள்ளை பெருமானார் போற்றும் தலம் இது”

“சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் பந்தி செஞ்சடை பாசூர் அடிகள்” என்பது அப்பரடிகள் திருவாக்கு

“வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு செய்ததற்கு வீடு காட்டி” என்று திருவானைக்காவில் வழிபட்ட சிலந்தி மற்றும் யானை என்ற சிவகணத்தாரின் சரிதம் கூறும் அப்பரடிகள் தாண்டகம் இத்தலத்தில் இடம்பெற்றுள்ளது

எம்மையாளும் அம்மைத்திருத் தலையாலே வணங்கியது, என்று ஊர்புறத்தே தாங்கியிருந்து பின் இறைவனார் கனவிடை எழுந்தருளி “பாடல் வேண்ட,” பொழுது விடிந்ததும் பழையனூர் திருவாலங்காடு பாடி தேவரணையும் திருப்பாசூர் நோக்கிச் சென்றனர்,

அங்கணைந்த மறைவாழ்வாம் சைவசிகாமணியாரை பாசூர் அடியார் பெருமக்கள் வணங்கி எதிர் கொண்டனர் அவர்களை வணங்கிப்

“பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகத்துப் புராதனர் வேயிடங்கொண்ட புனிதர் கோயில் விருப்பின் உடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனியெலாம் முகிழ்ப்ப நின்றே அருட்கருணைத் திருவாளன் நாமஞ் “சிந்தையிடையார்” என்று இசைப்பதிகம் அருளிச் செய்தார்” என்கின்றார்கள் தெய்வச்சேக்கிழார் பெருமானார்!!

அந்தணர்கள் சூளாமணியாம் புகலிவேந்தர் சந்தநிறைை செந்தமிழால் செம்மையுற செய்தளித்த “சிந்தை இடையார்” என்ற திருப்பதிகப் பாடல்கள் இவை!!

பண் : காந்தாரம்

பாடல்

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வார் ஊர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்று
ஆருந் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே

கையால் தொழுது தலைசாய்த்து உள்ளங் கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யாடுதல் அஞ்சுடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகங் கோடலீனும் பாசூரே

பொருள்

மனத்திலும், தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்

இடம் விட்டுச்செல்லும்போதும், வரும் போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்

கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.

திருச்சிற்றம்பலம்

Tags: GodhindusivanTamilஇந்துகடவுள்சிவன்தமிழ்

Related Posts

ஆன்மிகம்

இன்று சனி மஹாப்பிரதோஷம்!

December 12, 2020
ஆன்மிகம்

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!! இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.

November 23, 2020
ஆன்மிகம்

சிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன ?

November 23, 2020
ஆன்மிகம்

கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன

November 24, 2020
ஆன்மிகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.

November 23, 2020
ஆன்மிகம்

இவர் அறியாத ஒரு சொல் அச்சம்.

October 1, 2020

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

பிரதமரை தரைகுவாக பேசிய ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்.

May 22, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய பெண் காவலரின் சட்டையை பிடித்து தகராறு!

ஊரடங்கு உத்தரவை மீறிய பெண் காவலரின் சட்டையை பிடித்து தகராறு!

April 5, 2020
பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

October 10, 2020

அமித்ஷாவின் ஒரே கல்லில் விழுந்த இரண்டு மாங்காய்.

March 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • டெல்லி பேரணியில் காயமடைந்த போலீசாரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
  • Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.
  • விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.
  • அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In