Friday, January 22, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாஜக இளைஞரணியிடம் சரணாகதி அடைந்த தேச துரோக தி.மு.க!

Oredesam by Oredesam
November 17, 2020
in செய்திகள், தமிழகம்
0
பாஜக இளைஞரணியிடம் சரணாகதி அடைந்த தேச துரோக தி.மு.க!
1.8k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினையில் பிறந்து, பிரிவினையில் வளர்ந்து, பிரிவினையை பாதையாக வகுத்துக்கொண்டு பயணம் செய்கின்ற கட்சி திமுக. திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழகம், இந்தியாவுக்கு “சுதந்திரம் வேண்டாம்” என்று வெள்ளையர்களின் கால்களை பிடித்து கெஞ்சியது. லண்டனில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை மட்டுமாவது ஆட்சி நடத்துங்கள் என்று மன்றாடியது.

திராவிடர் கழகத்தின் குழந்தையான திமுகவின் முன்னணி தலைவர்களான சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களெல்லாம் சுதந்திர போராட்ட காலத்தில் இளைஞர்களாக இருந்தும், சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், “இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம்” என்ற கொள்கையின் காரணமாக, சுதந்திர போராட்டத்திற்கு ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.

READ ALSO

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.

ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு “தனி திராவிட நாடு” என்ற பிரிவினைவாத கொள்கையை மக்களிடம் விதைத்து, தங்களின் நயவஞ்சக விஷத்தை அடுக்குமொழி வசனங்கள் மூலம் இளைஞர்களிடம் திணித்து, அவர்களையும் பிரிவினைவாத கோஷம் எழுப்ப வைத்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாடு சுதந்திரம் அடைந்த தினத்தையும், குடியரசு தினத்தையும் இன்று வரை கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். திராவிடர் கழகம், திமுக, இவற்றின் உதிரி கழகங்கள் அனைத்தும் இந்தக் கொள்கையில் இருந்து இதுவரை மாறவில்லை.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், 2011 – ஆம் ஆண்டு வரை, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றியதே இல்லை. அதன் பிறகும் அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, அவர் அவருக்குப்பின் திமுக தலைவராக முடிசூட்டப்பட்ட மு.க.ஸ்டாலினோ தேசியக்கொடியை ஏற்றியதில்லை.

பாஜக போன்ற தேசபக்த இயக்கங்கள் மற்றும் தேசத்தை தெய்வமாக போற்றும் பத்திரிகைகள், இணையதள ஊடகங்கள், திமுகவின் இத்தகைய தேச விரோத போக்கை, மக்களிடம் கொண்டு சென்றதன் விளைவாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் -15 அன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி அவமதித்தார். அதாவது தேசிய கொடியை ஏற்றியதும் அந்தக் கொடிக்கு உரிய மரியாதையை செலுத்தும் வகையில் வணக்கம் செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.

ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அதற்கு உரிய வணக்கம் செலுத்தாமல் சென்றுவிட்டார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மோடி அரசு ரத்து செய்தபோது,“காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை” என்று திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை மூலமாக தெளிவு படுத்தியது திமுக.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் திமுக இளைஞரணி சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களில், பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நீக்கி, இந்திய வரைபடத்தை வெளியிட்டு இருந்தது.

இதனை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டினார் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவின் தேச விரோத செயல் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

திமுகவின் இந்த தேச விரோத செயல், தேச பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இருந்து, அந்த தேசவிரோத வீடியோவை நீக்கம் செய்துள்ளார்.

Tags: BJYM TamilNaduDMKTamilTAMIL NEWSudyanithiVINOJ SELVAM

Related Posts

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.
இந்தியா

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

January 22, 2021
திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
அரசியல்

திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.

January 20, 2021
உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!
அரசியல்

உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!

January 20, 2021
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

January 20, 2021
சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகம்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 20, 2021
செய்திகள்

இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

January 20, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது ! பெரியாரை வச்சு செய்த சம்பவம் !

பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது ! பெரியாரை வச்சு செய்த சம்பவம் !

August 24, 2020
சாத்தான்குளம் பிரச்னையில் மத ரீதியாக செயல்படுகிறது வணிகர் சங்கமும் அரசியல் கட்சிகளும்! ஆதாரங்களுடன் இந்துமுன்னணி குற்றச்சாட்டு!

சாத்தான்குளம் பிரச்னையில் மத ரீதியாக செயல்படுகிறது வணிகர் சங்கமும் அரசியல் கட்சிகளும்! ஆதாரங்களுடன் இந்துமுன்னணி குற்றச்சாட்டு!

June 29, 2020

மஹாகவி பாரதி நினைவு தினம் இன்று….

September 11, 2020
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமைழைக்கு வாய்ப்பு.

January 3, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா
  • திமுகவுக்கு மக்கள் பெரிய ஆப்பு வைக்கப்போகிறார்கள் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
  • உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!
  • தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In