இந்தியா

வெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..

வெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..

ஈ-சஞ்சீவனி வெளிநோயாளிகள் பிரிவில் முன்னாள் ராணுவ மருத்துவர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்குவார்கள். நாட்டின் தேவையைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு உதவுவதற்காக முன்னாள்...

எந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.

ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்டெசிவிர் தேவையைக் கருத்தில் கொண்டு, அது போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, 2021 மே 16ஆம் தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் குப்பிகளின் விவரத்தை மத்திய இரசாயனம் மற்றும்...

கபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி

கபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி

கொவிட்- 19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியான கொவிட் நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் வழங்கும்...

தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…

அவசிய தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது எதிர்காலத்தில் புற்று நோயை உருவாக்கும்.எனவே தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப்...

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

“தடுப்பு மருந்து தட்டுப்பாடு வராது” – மத்திய அரசு!

இன்று காலை, "அடுத்த 2 - 3 மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு வரும் என்று அதார் பூனாவாலா ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு நேர்காணல் தந்திருக்கிறார்." என்ற...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021… மக்கள் தீர்ப்பு என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கிலர 14 தொகுதிகளில் திமுக முன்னிலை! சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை...

கேஜ்ரிவால் தில்லி நிஜாம் மாதிரி, தான்தோன்றித்தனமான முடிவுகளால் நிகழ்வது என்ன ?

கேஜ்ரிவால் தில்லி நிஜாம் மாதிரி, தான்தோன்றித்தனமான முடிவுகளால் நிகழ்வது என்ன ?

கேஜ்ரிவால் தில்லி நிஜாம் மாதிரி, தான்தோன்றித்தனமான முடிவுகளால், தில்லி தத்தளிக்கிறது. முதல் அலையின்போது கேஜ்ரிவால் நம்பர்களோடு விளையாடினார்.. கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது. இந்த முறை, அந்த...

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜக பட்டேலுக்கு சிலை வைத்தது தவறானது என்ற பேச்சு வருவதற்கு உண்மை காரணம் ?

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜக பட்டேலுக்கு சிலை வைத்தது தவறானது என்ற பேச்சு வருவதற்கு உண்மை காரணம் ?

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜக பட்டேலுக்கு சிலை வைத்தது, ஆனால் நேரு மற்றும் காங்கிரஸ்தான் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியது என்று கொஞ்சம் ஓவராகவே உதார் விட்டுத்...

9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியுள்ளது ரயில்வே.

9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியுள்ளது ரயில்வே.

கொவிட் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பும் படி பல மாநிலங்கள்  கோரிக்கை விடுத்துள்ளன. ரயில்வேயிடம் கொவிட் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்ட 4000 ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன.  9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தற்போது, இந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மொத்தம் 81 பேர், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எங்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தில்லி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 9 ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளின் விவரம்:  தில்லியில் மாநில அரசின் தேவையை ரயில்வே முழு அளவில் நிறைவேற்றி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் 75 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 50 ரயில் பெட்டிகள் சகுர் பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 ரயில் பெட்டிகள் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திலும் உள்ளன. தற்போது சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்தாண்டு கொவிட் முதல் அலையின் போது, சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் 857 பேர் அனுமதிக்கப்பட்டனர். https://www.youtube.com/watch?v=OF0eR2HNJOw&t=2s மத்தியப் பிரதேசம் போபாலில், 292 படுக்கை வசதிகளுடன் 20 கொவிட் சிகிச்சை பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.  தற்போது இங்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா நந்த்ரூபரில் 292 படுக்கை வசதிகளுடன் 24 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 73 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய 2வது அலையில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டு, 7 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 4 பேர் அனுமதிக்கப்பட்டனர். உத்திரப் பிரதேச அரசு எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றாலும், இங்கு பைசாபாத், பதோகி, வாரணாசி, பரேலி மற்றும் நசிபாபாத் ஆகிய இடங்களில் தலா 10 கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 800 படுக்கை வசதிகள் உள்ளன.

குறுகிய காலத்தில் 14 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும்  திட்டத்தின் கீழ், இதுவரை 14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. உலகளவில் மிக விரைவாக, வெறும் 99 நாட்களிலேயே இந்தியா இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 20,19,263 முகாம்களில்‌ 14,09,16,417 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 99-வது நாளான நேற்று (ஏப்ரல் 24, 2021), நாடு முழுவதும் 25,36,612 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,85,110 ஆக (83.05%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,113 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 74.53 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,160 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 37,944 பேரும், கர்நாடகாவில் 29,438 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 26,82,751 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 15.82 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.13 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

Page 1 of 58 1 2 58

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.