Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘காதி பவனை’ மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்

Oredesam by Oredesam
September 2, 2024
in இந்தியா
0
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘காதி பவனை’ மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள வரலாற்றுச்  சிறப்புமிக்க காந்தி ஆசிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட நூற்றாண்டு விழா கட்டிடத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட காதி பவனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் 2024, செப்டம்பர் 01 அன்று திறந்துவைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 20 கைவினைஞர்களுக்கு ஊதுபத்தி (அகர்பத்தி) தயாரிக்க தானியங்கி  இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் கிராமத் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 பிளம்பர்கள், 20 எலக்ட்ரீஷியன்களுக்கு கருவிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்,  உள்நாட்டு காதி தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’ என்ற இயக்கத்தில் இணையவேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கும், கைவினைஞர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

கைவினைஞர்களிடையே உரையாற்றிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார், தமிழ்நாட்டில் 74 காதி நிறுவனங்கள் மூலம் 11,000-க்கும் அதிகமான  கைவினைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த நிதியாண்டில், சென்னையில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில அலுவலகம் மூலம் பிரதமரின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 191 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 6,508 அலகுகள் நிறுவப்பட்டு 52,000-க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது  என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காந்தி ஆசிரமத்தின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநில அரசு மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி ஆசிரமம், மகாத்மா காந்தியின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், இந்தியாவின் பழமையான காந்தி ஆசிரமங்களில் ஒன்றாகும் என்றும் காந்தி ஆசிரமத்துடன் தொடர்புடைய அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான சுதந்திர போராட்ட வீரர் சி.ராஜகோபாலாச்சாரியால் நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி 1925, 1936 ஆகிய  ஆண்டுகளில் வருகை தந்ததையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இடைக்கால தலைவரை மீண்டும் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் !

இடைக்கால தலைவரை மீண்டும் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் !

August 26, 2020
சென்னையில் ‘போக்சோ’வில் கைதான நபர் நடத்தும் சர்ச்; ‘சீல்’ வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

சென்னையில் ‘போக்சோ’வில் கைதான நபர் நடத்தும் சர்ச்; ‘சீல்’ வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

April 23, 2023
kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar

2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்…!! அவசரமாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. வெளி வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…

January 5, 2024
அதானிக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்?

அதானிக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்?

February 4, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x