Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மக்களிடம் சதுரங்க வேட்டையாடிய தி.மு.க நிர்வாகி! இரிடியம் மோசடியின் பின்னணி!

Oredesam by Oredesam
July 12, 2024
in செய்திகள், தமிழகம்
0
dmk scam

dmk scam

FacebookTwitterWhatsappTelegram

மக்களிடம் சதுரங்க வேட்டையாடிய தி.மு.க நிர்வாகி! இரிடியம் மோசடியின் பின்னணி!

சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும் என மதுரை வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி – திமுக நிர்வாகி, பெண் சிலம்பம் மாஸ்டர் மீது வழக்குப்பதிவு

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் பர்னிச்சர் கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு தனது கடை அருகே இருந்த கலைச்செல்வி என்ற பெண் தொழில்ரீதியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தெய்வேந்திரனிடம் இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அடிக்கடி தெய்வேந்திரனிடம் ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார். ஆனாலும் தெய்வேந்திரன் கலைச்செல்வியின் பேச்சை முழுமையாக நம்பாத நிலையில் ”திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகியான முகமது ரபி பேசுகிறார்”- எனக் கூறி செல்போன் மூலமாக பேச வைத்துள்ளார். செல்போன பேசிய முகமது ரபியும் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தருந்த முகமது ரபியை நேரில் சந்தித்த தெய்வேந்திரன் ரபியிடம் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார்.

இரிடிய டீல் மீட்டிங்
இதனையடுத்தும் சில நாட்கள் பிறகு மீண்டும் தெய்வேந்திரனை தொடர்பு கொண்டு ரபி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் முகமது ரபிக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னையில் இரிடிய டீல் மீட்டிங் இருக்கிறது என கூறி சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பிரமாண்டமான தங்குவிடுதியில் தங்கவைத்து, தெய்வேந்திரனிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தங்குவிடுதியில் நடைபெற்ற மீட்டிங்கில் மதுரையில் இருந்து தெய்வேந்திரன் சென்றபோது பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நபர்கள் வந்துள்ளனர். அப்போது மீட்டிங்கில் பேசிய ரபி உள்ளிட்ட சில நபர்கள் மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவரும் இன்னும் சில நாட்களில் மும்பைக்கு சென்று அங்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என நைசாக ஆசைவார்த்தை கூறி பேசியுள்ளனர்.

நம்பிக்கை மோசடி
அப்போது மதுரையை சேர்ந்த தெய்வேந்திரனிடம் பேசிய கலைச்செல்வி உங்களுக்கான 20 கோடி ரூபாய் பணம் தயாராக உள்ளதால், நீங்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் பணமாக எடுத்து வாருங்கள் என தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.

இதனை நம்பி தெய்வேந்திரன் உடனடியாக 5 லட்சம் ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ரபி மற்றும் கலைச்செல்வியிடம் 18லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையிலும் 20கோடிக்கான இரிடிய கலசமோ, பணமோ கொடுக்காத நிலையில், கலைச்செல்வி மற்றும் முகமது ரபியிடம் தெய்வேந்திரன் தான் கொடுத்த 18லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட போது தன்னை இருவரும் தொடர்ந்து செல்போனில் மிரட்டுவதாக கூறி தெய்வேந்திரன் தெற்குவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தெய்வேந்திரனின் புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகியான முகமது ரபி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் தெற்குவாசல் சரக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

“பாஜக மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களை தகர்த்தெறிகின்றன” – கதறுகிறார் சீன அடிமை யெச்சுரி… காரணம்?

May 8, 2020
மணல் கடத்துவோருக்கு இனி முன் ஜாமின் கிடையாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மணல் கடத்துவோருக்கு இனி முன் ஜாமின் கிடையாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

September 4, 2020
Vanathi Srinivasan

முருக பக்தர்களை ஒடுக்க மதுரையில் 144 தடை உத்தரவா?’ திமுக அரசை விளாசி தள்ளிய வானதி சீனிவாசன்!

February 3, 2025
ரத்தன்டாடா எடுத்த அதிரடிமுடிவு இந்திய மாணவர்களுக்கு  உதவித்தொகை…

ரத்தன்டாடா எடுத்த அதிரடிமுடிவு இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை…

June 21, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x