கேரள மாநிலத்தை சேர்ந்த அஜிதா. இவர், திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில், முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார்.
இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 2023ல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜிதாவின் மீதான அந்த வழக்கானது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும், மேலும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக எஸ்ஐ ரமா கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததன்படி, டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஆலோசனைப்படி, அஜிதாவிடம் இருந்து எஸ்.ஐ.,ரமா இன்று ரூ.3000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். எஸ்.ஐ., ரமா விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















