கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி முதலவர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்துக்களை தொடர்ந்து வரும் தி.க எவ்வளவு நிதி கொடுத்தார்கள், என மக்கள் கேவி எழுப்பியுள்ளார்கள் . கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வளவு தந்தார்கள் அதுமட்டுமில்லாமல் ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் எவ்வளவு நிதி கொடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது
கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பொருளாதரம் சற்று பின்னடைவை சந்த்தித்துள்ளது. ஐகானை தொடர்ந்து அரசுகளின் சார்பில் நிவாரண நிதி வாங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசின் சார்பில் பிரதமர் நிவாரண நிதியும் தமிழ்கத்தில் முதல்வர் நிவாரண நிதி பெறப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்க இந்து சமய அறநிலைய துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.முதன்மை நிலை கோயில்களின் செயல் அலுவலர்கள் இணை உதவி கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஊரடங்கால் தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே முதல்வர் நிவாரண நிதிக்கு இன்று மாலைக்குள் தக்கார், அறங்காவலரின் தீர்மானத்துடன் அறநிலைய துறைக்கு உரிய நிதியை அனுப்ப வேண்டும்.பழநி, திருச்செந்துார், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்கள் தலா 35 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் பண்ணாரி, அழகர்கோயில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழநி ஆண்டவர், மாங்காடு, திருப்பரங்குன்றம், சங்கரன்கோவில், சுவாமிமலை, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில்கள் தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
காஞ்சிபுரம் தேவராஜர், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனுார் அங்காளம்மன் உள்ளிட்ட கோயில்கள் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இந்த 47 கோவில்களின் உபரி நிதியான 10 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.