இந்திய சரித்திரத்தில் ஒரே மாதத்தில் 10 ஏவுகணைகள் ! உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி! அச்சத்தில் சீனா!

இந்தியா கடந்த மாதத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 10 ஏவுகனைகளை சோதித்து பெரும் அதிர்ச்சியினை உலகுக்கு கொடுத்துள்ளது, இது இந்திய சரித்திரத்தில் இதுதான் முறை சீன அச்சுறுத்தல் உள்ள நிலையில் இந்தியாவின் இந்த அதிரடி சோதனை, சீனாவுக்கு சவால்விடும் நோக்கிலும் , எந்த நேரத்திலும் போருக்கு தயார் என்பதை தெரிவிக்கும் சூளுரையாகவும் கருதபடுகின்றது

இது வடகொரியாவோ , ஈரானோ செய்யும் மொக்கை ஏவுகனை சோதனை அல்ல, எல்லாமே மிக நவீன ரகம்பிரம்மோஸின் மேம்பட்ட வடிவம், இலக்கை தேடி அழிக்கும் நிர்பாய் ரகம், நீர்மூழ்கி கப்பலை தேடி சென்று தாக்கும் பிரம்மோஸின் இன்னொரு வடிவம் இது போக ஒலியினை விட இருமடங்கு வேகமாய் செல்லும் சவுரியா ஏவுகனை என தொடர்ந்து சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா மேலும் உலகிற்கு ஒரு மிகபெரும் அதிர்ச்சியினை கொடுத்தது

ஆம், விமானத்தில் இருந்து தரைக்கு ஏவபடும், அதுவும் ஆளில்லா விமானத்தில் இருந்து கூட ஜிபிஎஸ் முறையில் ஏவபடும் ருத்திரம் எனும் மிக நவீன ஏவுகனையினை சோதித்திருக்கின்றது இது போக 5000 கிமீ தொலைவினை தாக்கும் அக்னியின் மேம்பட்ட வடிவினை சில நாட்களில் சோதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது

ராணுவ தத்துவபடி, ஒரு நாடு ஒரு ஆயுதத்தை சோதிக்கின்றது என்றால் அதைவிட வலுவான ஆயுதம் அந்நாட்டிடம் மறைத்து வைக்கபட்டுள்ளது என்பது பாலபாடம் அப்படி இந்தியாவின் சோதனையே இப்படி என்றால், மறைமுகமாக உள்ள பலம் மிக பெரிதாய் இருக்கும் என்கின்றன செய்திகள்சீனாவின் வான்படை, கடற்படை,, டாங்கிபடை, கட்டுபாட்டு மையம்., நீர்மூழ்கி ஏன் பீஜிங் வரை மட்டுமல்ல சீனாவின் செயற்கைகோள்கைளையும் நொறுக்கி போடும் வகையில் பெரும் மிரட்டல் கொடுத்திருக்கின்றது இந்தியா.

இதெல்லாம் மிகபெரும் விஷயம், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரும் அசுர பலம் பெற்றிருப்பதெல்லாம் ஏதோ ஒரு சக்தி இந்தியாவுக்கு உதவுகின்றது என்பதை உணர்த்துகின்றது கவனியுங்கள், இன்னொரு நாடு இப்படி செய்தால் உலக அளவில் கண்டனம் எழும், கூக்குரல் எழும், பொருளாதார தடையெல்லாம் பாயும்
ஆனால் இப்பொழுது எல்லா நாடும் கனத்த மவுனம் ஏன்? அதுதான் மோடி, அவர் சும்மா ஊர் சுற்றுகின்றார், வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாய் சுற்றுகின்றார் என்பதற்கான விடைதான் இம்மாதிரி சாதனைகள் மோடி இரண்டாம் சாஸ்திரி என்பதில் துளியும் சந்தேகமில்லை!

எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்

Exit mobile version