தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசிப்பவர் முகமது அபுசாலி. அப்பகுதியினர் இவரை மிட்டாய் தாத்தா என்றே அழைக்கிறார்கள். இவருக்கு தற்போது 114 வயதாகிறது. தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களைத்தானே சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். தட்டில் மிட்டாய்களை எடுத்து கொண்டு தஞ்சையின் பல பகுதிகளுக்கு நடந்தே சென்று விற்பனை செய்வார்.
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மிட்டாய் வியாபாரம் செய்ய முடியவில்லை. உழைத்துப் பழக்கப்பட்டவருக்கு சும்மா முடங்கி இருக்கவும் முடியவில்லை. அதனால் தான் வசிக்கும் இடத்திலேயே தேங்காய் வியாபாரம் செய்ய துவங்கி தற்போது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகவும் பாடமாகவும் திகழ்ந்து வருகின்றார்.
தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா! ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி!
