133-வது நாள் – 20.86 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பு டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.86 கோடியை (20,86,12,834) கடந்துள்ளதாக இன்று மாலை 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கை தெரிவிக்கிறது.

18 முதல் 44 வயதுடைய 13,36,309 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டனர். இதே வயதில் உள்ள 275 நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்தை பெற்றனர்.

தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் மூன்றாவது கட்டம்

தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 1,66,47,122 பயனாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயதுடைய பயனாளிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தடுப்பு மருந்தை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 8,81,468 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 14,936 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் 133-வது நாளான இன்று, மொத்தம் 28,07,411 டோஸ்கள் வழங்கப்பட்டன. இதில் 25,99,754 பயனாளிகள் முதல் டோசையும், 2,07,657 பயனாளிகள் இரண்டாவது டோசையும் பெற்றுக்கொண்டதாக தற்காலிக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி அறிக்கைகள் இன்று பின்னிரவு நிறைவு செய்யப்படும்.

Exit mobile version