காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகரும், மிக நெருங்கிய நண்பரர் தற்போது காங்கிரஸ் பொருளாளராக உள்ள அகமது பட்டேலிடம் 14,500 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா ஆகியோரால் நிறுவப்பட்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடனாகப் சுமார் 14,500 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியன ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வழக்குப் பதிந்துள்ள நிலையில் நிதின், சேட்டன் இருவரும் நாட்டைவிட்டு வெளியேறி நைஜீரியாவுக்குச் சென்றுவிட்டனர்.
இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலின் பெயரும் உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அவருக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. கொரோனா காலகட்ட்டதால் அமலாக்கத்துறை அழைத்தபோது வர முடியவில்லை என அகமது பட்டேல் கூறியிருந்தார்
அமலாக்கத்துறையோ டெல்லியில் உள்ள அகமது பட்டேல் வீட்டுக்குச் சென்றது அவரிடம் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் பற்றி துருவி துருவி விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கு வங்கிக் கடன் வழங்கியதில் அகமது பட்டேலுக்கு எந்த விதத்தில் தொடர்பு உள்ளதை பற்றி விசாரணை நடத்தி உள்ளார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















