8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி ! விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு !

வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 9 தொடங்கி வைத்தார். இத்திட்டம், சமுதாய வேளாண்மையைக் கட்டமைக்கவும் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கட்டமைப்புக்கும் உதவும். தொடக்க வேளாண் கடன் சங்கம் (Primary Agricultural Credit Society- PACS), வேளாண் உற்பத்தி அமைப்புகள் (Farmer Producer Organisations – FPOs), வேளாண் தொழில்முனைவோர் (Agri-entrepreneurs) ஆகிய தரப்பினருக்கு உதவி அளிக்கப்படும்.

இந்த வசதிகளின் மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்குக் கூடுதலான மதிப்பைப் பெற முடியும். தங்களது உற்பத்திப் பொருள்களை குளிர்சாதன சேமிப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்க இயலும், அதிக விலைக்கு விற்பனை செய்ய இயலும். உணவுப் பண்டங்கள் வீணாவதைக் குறைக்கும். பதனீட்டை அதிகரிக்கும். கூடுதல் மதிப்பும் கிடைக்கும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 30 நாட்களிலேயே இத்திட்டத்தின் கீழ் 2,280 விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று மொத்தம் ரூ. 1000 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி காணொளிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் (FPOs), தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (PACS), பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இத்துடன், பிரதம மந்திரி – கிசான் திட்டத்தின் கீழ் எட்டரை கோடி விவசாயிகளுக்கு ஆறாவது தவணையாக அளிப்பதற்காக மொத்தம் ரூ. 17,000 கோடி நிதியை விடுவித்தார். இந்த நிதி விவசாயிகளுக்கு ஆதாருடன் கூடிய வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்றடையும். இதையடுத்து திட்டம் தொடங்கப்பட்ட 2018 டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரையில் நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 90,000 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விவாசிகளுக்கான திட்டத்தின் ஆறாவது தவணையின் ஒரு பகுதியாகும். வேளாண் தொழில்முனைவோர், தொடக்க நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் உழவர் குழுக்களுக்கு அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் பண்ணை சொத்துக்களை வளர்ப்பதற்கான நிதி வசதி தொடங்கப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய விவசாய சொத்துக்களான குளிர் சேமிப்பு, சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு ஊக்கமளிப்பதற்காக புதிய விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ .1 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

PM-KISAN திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு, 6,000 ரூபாயை மத்திய அரசு நிதியுதவியாக வழங்கி வருகிறது. 2018 டிசம்பரில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா (பி.எம்-கிசான்) திட்டத்தின்படி, ரூ. 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாயை வழங்கப்பட்டுள்ளது.

ஊழலைத் தடுப்பதற்கும் விவசாயிகளுக்கு வசதியை அதிகரிப்பதற்கும் இந்த நிதி நேரடியாக ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாற்றப்படுகிறது

Exit mobile version