தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 18 பேர் இன்று 7.2.2024 காலை புதுடில்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் முன்னிலையில் (அ.இ.அ.தி.மு.க. விலிருந்தும் இந்தியதேசிய காங்கிரஸிலிருந்தும் பா.ஜ.க வில் இணைகிறார்கள்.மேலும் தி.மு.க. முன்னாள் எம்.பி. ஒருவரும் பா.ஜ.கவில் இணைய உள்ளார். இதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி விரைந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் வருகிற 11-ந்தேதி நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார்.
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்.அண்ணாமலையின் இந்த யாத்திரை நிறைவு விழா வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாபெரும் ஒரு படையை பாஜகவில் இணைத்துள்ளார் அண்ணாமலை. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்துள்ளார்கள் . டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில்,மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்,எம்.எல்.ஏ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தனர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, கு.வடிவேல், கந்தசாமி உள்ளிட்டோர் 15 எம்.எல்.ஏ க்கள் பாஜகவில் இணைந்தனர்.
- திரு.கு.வடிவேல் – கரூர்
- திரு.P.S. கந்தசாமி – அரவக்குறிச்சி
- திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) – வலங்கைமான்
- திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர
- திரு R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர்
- திரு.M.V.ரத்தினம் – பொள்ளாச்சி
- திரு S.M.வாசன் – வேடச்சந்தூர்
- திரு.S.முத்துகிருஷ்ணன் – கன்னியாகுமரி
- திரு.P.S. அருள் – புவனகிரி
- திரு.N.R.ராஜேந்திரன்
- திரு. R.தங்கராசு – ஆண்டிமடம்
- திரு.குருநாதன்
- திரு V.R. ஜெயராமன் – தேனி
- திரு.பாலசுப்ரமணியன் – சீர்காழிமற்றும்
- திரு.சந்திரசேகர் – சோழவந்தான்
இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர் அவர்கள் மார்ச் இறுதிக்குள் பா.ஜ.க வில் இணைவார்கள்
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஏனென்றால் 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.பிரதமர் மோடியின் தலைமையில் மேலும் பல கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
ஆளும் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தான் பாஜகவிற்கு வர போகிறாரம். அனால் கட்சி மாறாமல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன் தான் என பேச்சுக்கள் அடிபடுகிறது.
14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது அதிமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக காணப்டுகிறது.அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்க உள்ளது.மேலும் இன்னும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்ற திகைப்பில் தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
அண்ணாமலையின் அதிரடி அரசியலால் தமிழக திராவிட கட்சிகள் கலக்கமடைந்துள்ளது. ஒருபக்கம் திமுகவின் ஊழல் பட்டியில் ஒருபக்கம் அதிமுகவின் கட்சியை பதம் பார்ப்பது என பாஜகவின் ஆட்டம் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா பொதுக் கூட்டத்தை பிரமாண்ட முறையில் நடத்த தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 530 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் சுமார் 5 லட்சம் மக்கள் பங்குபெறும் வகையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அந்த விழாவில் ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரை மேடையில் ஏற்ற வேண்டும் என்று அண்ணாமலை அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்.
அண்ணாமலை இதையும் செய்துகாட்டிவிட்டால் தமிழகத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக மாறுவர் என்பதில் ஐயமில்லை