பிள்ளைகள் மதம் மாறியதால் தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக எழுதி வைத்துள்ள்ளார் முருகன் பக்தர் மு.வேலாயுதம். இது குறித்து அவர் தெரிவித்தது எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.3 பேரும் அரசுப்பணியில் நன்றாகவே உள்ளனர். 3 பேருக்கும் திருமணமும் ஆகி விட்டது. காதல் திருமணத்திற்காக 3 பிள்ளைகளும் மதம் மாறியதால் நானும் என் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். என மனைவி இறந்துவிட்டார் இதனால் மனம் வருத்தமடைந்து எனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமிக்கு எனது 2 கோடி ரூபாய் சொத்தினை தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கியுள்ளேன்.
நான் நன்கொடையாக வழங்கிய இச்சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும். நானும் என் மனைவியும் தற்போது அந்த சொத்தில் ஒரு பகுதியில் குடியிருந்து வந்தோம் மனைவி மரணமடைந்து விட்டதனால்மீதப்பகுதியை அதாவது 2 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தை காணிக்கையாக கொடுத்துள்ளோம். மேலும் நான் பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அவர்கள் மதம் மாறியது தான் பிடிக்கவில்லை என்றார்.
3 பிள்ளைகளும் என் சொல் பேச்சு கேட்கவே இல்லை. பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்க வேண்டும். இந்தச் சொத்து நான் காஞ்சிபுரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய போது சுயமாக சம்பாதித்த சொத்தாகும். இந்தச் சொத்தினை தானமாக செய்யும் முழு உரிமையும் எனக்கு உள்ளது.கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள மண்டபத்தில் எனது சொத்தை முருகனுக்கு காணிக்கையாக கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் மு.வேலாயுதம் தெரிவித்தார்.
தாய் தந்தையை மறந்து செல்லும் அனைத்தும் பிள்ளைகளுக்கும் இதே மாதிரி சொத்து மறுப்பு செய்தால் நாடக காதல் என்பது ஒழிக்கப்படும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















