நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள படம் பிகில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் கல்லூரி சாய்ராம் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின்சார்பில் ரசிகர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
10,000 பேர் அமரும் மைதானத்தில் டிக்கெட்டுகள் 20,000 அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கூட்டம் அதிகம் இருந்தது, ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு டிக்கெட் வாங்கியவர்கள் செல்ல முடியவில்லை.
இது கூட்டத்தை கூட்டவே இந்த வழிமுறையயை பின்பற்றிருக்ககிறார்கள் , என சமூகவலைதளவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல் அரசை திட்டினால் அவர்கள் எதாவது பேசுவார்கள் அதை வைத்து படத்தை விளம்பரம் செய்து விடலாம் என்ற நோக்கில் விஜயின் பேச்சு அமைந்திருந்தது, சன் குழுமமே ஒரு கட்சியின் சார்புடையது. அதில் நடித்தவர் அரசை விமர்ச்சிப்பது புதிதல்ல.
அதே போல் அவரின் பேச்சு மெச்சிக்கும் அளவில் இல்லை வரி ஏய்ப்பு போன்ற பல சிக்கலில் சிக்கியுள்ளார் விஜய். gst பற்றி தவறான தகவலை தந்தவர் தானே விஜய், சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்று அறியாமல் பேசியவார் என நெட்டிசன்கள் வறுத்து எடுக்கின்றனர். கூட்டத்தை கூட்டி பெரிய தலைவராக முயற்சி எடுக்கவே டிக்கெட் மோசடி செய்துள்ளார் புதிய அரசியல்வாதி எனவும் கூறுகிறார்கள்.
விழாவிற்கு வந்த ரசிகர்கள் உட்கார இடமில்லை இடமில்லை என கூறி காவல் துறை திரும்பி போகச் சொன்னார்கள். தங்களிடம் இருக்கும் அனுமதி சீட்டை காட்டி திரும்பி போக முடியாது என கூறியுள்ளனர்.
ரசிகர்கள் அப்போது உள்ளே இருந்து ஒரு தகவல் வந்துள்ளது, கூட்டத்தை கலையுங்கள் என்று பின் காவல்துறை தடியடி மேற்கொன்றனர் இதனால் ரசிகர்கள் போலீசார் தடியடி நடத்தியதால், ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















