செய்தியாளர் அண்ணாமலைபேசியது : பாஜக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தலாக 2024 தேர்தல் இருக்கும். 2024 தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜ கூட்டணி உருவாக்கும். 39 தொகுதிகளிலும் பாஜ கூட்டணி வெல்லும். கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்களை கண்டு வருத்தமில்லை.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்தால் சரியாக இருக்காது. எந்த பாதையில் செல்ல வேண்டும் தெளிவாக இருக்கிறேன். 2024 தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் குறை சொல்லுகிறோம்.
தேர்தல் முடிவுகள் பாஜ தேஜ கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும். தேஜ கூட்டணியில் சிலர் சேரலாம்.அதிமுக இல்லையென்று வருத்தப்படவும் இல்லை. சந்தோஷபடவும் இல்லை.
2024 ல் திமுக.,விற்கும் பாஜ.,விற்கும் தான் சவால் . மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜ., திமுக.,விற்கு இடையே தான் போட்டி . என்டிஏ பாஜ வலிமையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வது குறித்து பாஜ தலைமை முடிவு செய்யும்.
2024 தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி.திமுக, பாஜ.,வைத்தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சியில் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.