இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. இந்த நிலையில் நாபிக்கு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் இஸ்லாமியர்களின் மாநாடு, டில்லி உள்ள நிஜாமுதீன் பகுதியின் மசூதி ஒன்றில் தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் வெளிநாட்டு இசுலாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் மார்ச் மாதம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் , மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பலியானார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அங்கு தங்கியிருந்த வர்களை தனிமை படுத்தினர். அதில் 70% பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதி நபர்கள் அங்கிருந்து வெளியேறி பதுங்கி உள்ளனர்.
இந்நிலையில், டில்லி சிறப்பு காவல்துறை அரசுடன் இணைந்து இன்று அதிகாலை டில்லி முழுவதும் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையின்போது டில்லி மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினரை காவல்துறை அதிடியாக கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியாவை சேர்ந்த 172 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 21பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.