கொரோனா வைரஸ் காரணமாக அதை சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு 21 நாட்கள் நாடு முடக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் விவசாய பெருமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய அரசு.கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் .
அவர் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சுமார் 1.76 லட்சம் கோடியில் பல்வேறு நலத்திட்டங்களின் அறிவிப்புகள் வெளியிட்டார். இதன் மூலம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் 28 ஆயிரத்து 256 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வங்கி கணக்கு வைத்திருக்கும் 19.86 கோடி பெண்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் தலா 500 ரூபாய் வீதம் 9,930 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், மொத்தமுள்ள எட்டு கோடி பேரில் 6.93 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 13 ஆயிரத்து, 855 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் விதவைகள், முதியோர், மாற்றுத் திறனாளகள் என 2.82 கோடி பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 1,405 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல 2.16 கோடி கட்டிடத் தொழிலாளர்களுக்கு 3,066 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.