நடிகர் கமலஹாசன் நடித்து வரும், இந்தியன் – 2 இப்படத்தை இயக்குபவர் சங்கர். இதன் படப்பிடிப்பு இரவுபகலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
பாடல் மற்றும் சண்டை காட்சிக்கு பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது தீடிரென்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது அரங்கு அமைக்கும் பானையில் ஈடுபட்டிருந்த ராட்சத ‘கிரேன்’ அறுந்து விழுந்து விபத்துக்குள்ள்ளானது,
இந்த எதிர்பாராத விபத்தில் அங்கு பணி செய்து கொண்டிருந்த மூன்று பேர் பலியாகினர்.
இதில் கிருஷ்ணா என்ற உதவி இயக்குனர், படப்பிடிப்பில் உதவியாளர்களாகப் பணியாற்றி வந்த மாது, சந்திரன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
10 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்கள் . ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜயின் பிகில் படத்தின் படப்பிடிப்பின்போதும், விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















