கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், புதிய கேரளாவை உருவாக்குவோம் என்று வைரலாகும மோகன்லாலின் வீடியோ வெளியாகியுள்ளது.
வரதட்சணை கொடுமையின் காரணமாக கேரளாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் தோட்டம் மற்றும் ஒரு கார் என இத்தனை பொருட்களை கொடுத்தும், விஸ்மயா என்னும் இளம்பெண் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் சித்ரவதைக்கு ஆளானார்.
இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டார்.விஸ்மயா தற்கொலை வழக்கு கேரளாவை உலுக்கி வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்தக் கொடூர சம்பவங்கள் கேரளாவில் உள்ள பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரதட்சணை கொடுமைகளை கண்டித்தும், வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும், குரல்களை எழுப்ப தொடங்கியுள்ளார்கள். மேலும், வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பெண்களும் புகைப்படங்களை வெளியிட்டு, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில் பெண்களுக்கு ஆதரவாக மோகன்லால் நடித்த ஒரு காட்சி வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆராட்டு’ படக்காட்சி தான் அது பெண்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் கேரளாவில் பெண்களுக்கு தைரியம் ஊட்டும் வகையில் அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளதால் மோகன் லாலின் வீடியோ வைராகி உள்ளது.
அந்த வீடியோ காட்சியில் வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். மோகன்லால் அதில், “பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு. வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்,” என்று கூறியுள்ளார்.