30 ஆயிரம் கோடி சம்பாத்தித்த முதல்வர் ஸ்டாலினின் மகனும் மருமகனும் : ஹெச். ராஜா
தமிழக முதலவர் ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகி, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது அந்த ஆடியோவில் கடந்த 60 ஆண்டுகளில் உதயநிதி மற்றும் சபரீசன் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் திணறிக்கொண்டு இருப்பதாக கூறியிருந்தார்
இந்த பிரச்சனைகளுக்கு இடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அமைச்சர் பிடிஆர் பல முறை முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதால் சந்திக்க முடியவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று
காலை முதலமைச்சர் ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் பிடிஆர் முதலமைச்சரை சந்தித்துள்ளார்
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இது குறித்து கூறுகையில் :
நிதியமைச்சர் தியாகராஜன் பேசிய ‘ஆடியோ’ வில், முதல்வர் ஸ்டாலினின் மகன், மருமகன் ஓராண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது குறித்து கூறியுள்ளார். இதற்காக அவரை துறை மாற்றினாலோ, பதவியில் இருந்து நீக்கினாலோ இவர்கள் சம்பாதித்தது உண்மை என உறுதியாகும்.இப்படி எல்லாம் சொல்லி தியாகராஜன் பதவியை காப்பாத்த முயற்சிக்கிறதை பார்த்தா, அவர் இன்னும் நிறைய பேசி, ஏகப்பட்ட தகவலை வெளியே கொண்டு வருவார்னு எதிர்பார்க்கிறீங்களோ?
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















