திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. அண்டை நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. இந்த நிலையில் அவ்வாறு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது. இந்த கடத்தலில் கேரளாவில் மக்கள் தொடர்பு அலுவலராக தூதரகத்தில் பணியாற்றி வந்த சரித் என்பவருக்கும் தொடர்பு உள்ளது.
மேலும் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக இருந்த ஸ்வப்னா என்பவரும் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஸ்வப்னா கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசின் முதன்மை செயலரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும் இது காலம் காலமாக நடந்து வருகிறது என்கின்றார்கள் இதுகுறித்து தெரிவிக்கையில் : கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தினதெல்லாம் பெரிய விசயமே இல்லை. முறைகேடான தங்கம் கேரளாவின் மிகப் பெரிய பிஸினஸ். பிரபல நகை அடகு ஃபைனான்ஸ்களில் நடப்பதாகக் கேள்விப்பட்ட விசயங்கள்.மற்ற இடங்களை விட முக்கிய நகை அடகு பைனான்ஸ்களில் அதிகமாகக் கடன் கொடுத்து அடகு எடுப்பார்கள். பெரும்பாலும் அடகு வைக்கும் நகைகள் முழ்கிவிடும். அப்படி அடகு முழ்கிப் போன நகைகள் எல்லாம் மீண்டும் தங்கக் கட்டிகளாக உருக்கி விற்பனைக்குச் செல்லும்.
இது நடைமுறை. ஆனால், நகை அடகு திருப்பப்பட்டாலும், திருப்பியதாக இவர்கள் கணக்கு காட்ட மாட்டார்கள். ஏற்கனவே அடகு வைத்தவர்களின் ஆதார் எண்களை வைத்து கூடுதலாக வைக்கப்பட்டது போல் கணக்கு காட்டி, அவையெல்லாம் உருக்கி விற்பனைக்கு வந்தது போல் கணக்கில் எழுதுவார்கள். அதாவது இந்த வருடம் முழ்கிய அடகு நகைகள் 100 கிலோ என்றால், இவர்கள் கணக்குப் படி 150-180 கிலோ என்று கணக்கில் காட்டிவிடுவார்கள். இப்படி கூடுதலாகக் காட்டப்படும் தங்கம் எல்லாம் வெளிநாடுகளிலிலிருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் தங்கம் தான்.
கேரளா அடகு நிறுவனங்கள் மற்றும் நகைக் கடைகள் மட்டும் எப்படி இவ்வளவு லாபகரமாக நடக்கிறது என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர் ஒருவர் உடைத்துச் சொன்ன விசயம் இது. அதாவது, நீங்கள் அடகு வைக்க கொடுக்கும் உங்கள் ஆதார் மற்றும் அடையாள அட்டை தான் அவர்களின் தங்கக் கடத்தல்களுக்கான துருப்புச் சீட்டு. அரசாங்கம் ஆதார் கேட்டால் எழுபத்தி எட்டு கேள்வி கேட்பவர்கள், இந்த ஊழல்கள் பற்றித் தெரிந்தும் தெரியாதது போல அமைதியை போயிடுவார்கள். இந்த முப்பது கிலோ தங்கம் எல்லாம் கல்யாண பந்தியில் சிந்தும் சிறுதுளி சாம்பாருக்குச் சமம். இனி அங்கே அடகு வைப்பதற்கு பதில் அரசு வங்கிகளையே நாடவும்.
நன்றி : ஆனந்தன் அமிர்தன்