‘தி காஷ்மீர் ஃபைல்ஸை தொடர்ந்து அடுத்த உண்மைக்கதை கொண்ட படம் “தி கேரளா ஸ்டோரி” ! கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக அதே பணியில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர். அந்த 32000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழும் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார் சுதிப்தோ சென். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு நர்ஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் இருந்து கடத்தி சென்று ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண்ணின் உருக்கமான பதிவுடன் இந்த டீசர் துவங்குகிறது. பார்வையாளர்களை உருகவைத்துள்ள இந்த டிரைலர் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற ஒரு கதையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க பலரும் அச்சப்படும் நிலையில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் இதில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா. இப்படத்திற்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே அதை திரையில் படமாக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டுள்ளார் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென். அரேபிய நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சில அதிர்ச்சியான தகவல்களை சேகரித்துள்ளார் இயக்குனர்.
2009ம் ஆண்டு முதல் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த 32000 சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத பகுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சதி செயலின் பின்னணியில் இருக்கும் உண்மை கதையையும். பெண்களின் வலிமையை பற்றியும் எடுத்துரைக்கும் வகையிலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தினை படமாக்கியுள்ளனர். டிரைலர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள.இப்படம் மே 5ம் தேதி வெளியாகின்றது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















