தமிழகத்தில் உருவானது 38 வது புதிய மாவட்டம்! மக்கள் மகிழ்ச்சி !

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த புதிய அறிவிப்பை சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை. நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து, மயிலாடுதுறையைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்ற முதல்வர் புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக காணப்பட்ட விழுப்புரம் மாவட்டம் அண்மையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டதால் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ள, நிலையில் 38-வது மாவட்டமாக தற்போது மயிலாடு துறை மாவட்டமாக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டமன்ற கூட்ட தொடரில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தை நாகப்பட்டினம் மயிலாடுதுறை என இரண்டாக பிரித்து இரண்டு தனி தனிமாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இதன்படி, மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமையும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை மொத்தம் 38 ஆக உயர்ந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version