சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி நகரத்தை சேர்ந்தவர். இவர் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். பள்ளியின் பெயர் கமலா நிகேதன் இவர் சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், சென்னை வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்தவ சபையின் பிஷப் ஆக இருக்கும் எஸ்.டி.டேவிட் என்பவர் தனக்கு சென்னையில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு நிலத்தை பத்திரம் எழுதித்தருவதாக கூறி என்னிடம் ரூ.4 கோடி வாங்கினார். ஆனால் பேச்சுவார்த்தைப்படி அவர் எனக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதுபற்றி நான் கேட்டபோது இழுத்தடித்து வந்துள்ளார். பணத்தையும் திரும்ப தரவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிலத்தை விற்பதற்காக ரூ. 3.75 கோடி மோசடி செய்த சென்னை அட்வென்ட் சர்ச் பிஷப்பை, திருச்சி போலீஸ் கைது செய்தது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அட்வென்ட் சர்ச் அமைப்பு இயங்கிவருகிறது. இந்த அமைப்புக்குச் சொந்தமாக ஏராளமான பள்ளிகள் மற்றும் சர்ச்கள் உள்ளன.
இதன் சென்னை மாவட்ட பிஷப்-ஆக இருப்பவர் டேவிட். இவருடைய கட்டுப்பாட்டில் 107 சர்ச்கள், 50 பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை தவிர திருப்போரூர் பகுதியில் இயங்கிவரும் அட்வென்ட் பள்ளிகளுக்குத் தாளாளராகவும் இருந்துவருகிறார் டேவிட்.அட்வென்ட் சர்ச்சுக்குச் சொந்தமான இடம் ஒன்று வேளச்சேரியில் இருக்கிறது. இதன் மதிப்பு 50 கோடி ரூபாய். இந்த நிலத்தைத் திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 3.75 கோடியை முன்பணம் வாங்கியிருக்கிறார் டேவிட்.
அந்தப் பணத்தை சர்ச் வங்கிக் கணக்கில் போடாமல், இன்னொருவருடைய கணக்கை போலியாகத் தொடங்கி, பிஷப் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர் நிலத்தையும் அவர் விற்பனை செய்யவில்லை. மேலும், அவரின் பிஷப் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது.தற்போது அவர் பணி நீட்டிப்பில் இருந்துவருகிறார்.
அவரின் பணி நீட்டிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. இந்த நிலையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் சம்மந்தப்பட்ட நபர் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரை தொடர்ந்து திருச்சி போலீஸார் பிஷப் டேவிட்டை சென்னையில் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்துவருகின்றனர்.
அட்வென்ட் சர்ச் பொருளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் ஸ்டீபன், புரோக்கர் நெல்லை சாமுவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















