ஹத்ராஸ் சம்பவத்தினை வைத்து நாட்டில் மிகப்பெரும் கலவரத்தை உண்டு பண்ணிவிடம் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் திமுக போன்ற அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பாலியல் குற்றங்கள் நடைபெறும் மாநிலம் கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகும், அங்கு நடைபெறும் பாலியல் குற்றங்களுக்காக யாரும் இதுவரை போராட வில்லை ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தவறு நடந்தால் அதை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. அதற்கு தமிழக ஊடகம் ஒரு தூண் போல் செயல்படுகிறது.
இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தை வைத்து சாதிக்கலவரத்தை தூண்ட சதி நடப்பதாக உ.பி. அரசு தெரிவித்து கூறிவருகிறது உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான போராட்டங்கள் நடப்பதில் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளும், சில தேச விரோத சக்திகளும் வெளிநாட்டு நிதியுதவியுடன் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறையினர், முசாபர்நகரில் நாக்லாவைச் சேர்ந்த சித்திகி, மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக், பஹ்ரைச் மாவட்டத்தின் ஜார்வாலின் மசூத் அகமது, ராம்பூர் மாவட்டத்தின் கொத்வாலி பகுதியைச் சேர்ந்த ஆலம் என நான்கு பேரை கைது செய்தனர் .
இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீசார், டெல்லியிலிருந்து ஹத்ராஸ் நோக்கி காரில் வந்த 4 பேரை மதுரா சுங்கச்சாவடியில் மடக்கி கைது செய்தனர்.4 பேரும் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்போடு தொடர்பு கொண்டவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப் டாப்புகள், உத்தர பிரதேசத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வாசகங்கள் அடங்கிய பத்திரிகைகள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.