அண்டை மாநிலமான கேரளாவில் 4 ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் ஒன்று, கேரளா. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆளும் மாநிலம் ஆகும். . இந்த மாநிலத்தில்தான் கடந்த 4 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவை பொறுத்தவரையில் லவ் ஜிகாத்தால் பல பெண்கள் ஏமாற்றமாடுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. ஏமாற்றப்பட்ட பெண்கள் தீவிரவாத அமைப்புடன் இணைத்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.இதைமையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி என்ற படமும் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. கேரளாவில் அரசியல் லாபத்திற்காக இளம் பெண்களின் வாழ்க்கையை பணயமாக வைத்து அரசியல் செய்துவருகிறார்கள்.
இந்நிலையில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 தேதி 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும் புதுச்சேரி 1 தொகுதியும் அடங்கும். தமிழக பாஜக தலைவர்கள் தமிழக தேர்தலை முடித்துக்கொண்டு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா கர்நாடக போன்ற மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் போன்றோர் தற்போது கேரளாவில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வளைத்தபக்கத்தில் கேரளா தகவல் உரிமை பெறும் சட்டத்தில் பெறப்பட்ட ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது க்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பது :
கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5338 பெண்கள் காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது : கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் 5338 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர், இது The Kerala Story இல் உள்ளபடத்தை எதிரொலிக்கிறது. அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் காட்டிலும் நம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் பினராய் விஜயன் இது குறித்து பதிலளிக்க வேண்டும் நம்முடைய பெண்களை பாதுகாப்போம், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.#KeralaMissingGirlsஎன கூறியுள்ளார்