உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் உலகம் முழுவதும் 70 லட்சம் மக்களுக்கு
மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். இந்த கொடிய கொரோனா துவங்கிய இடம் சீனாவின் ஊகான் நகரம் ஆகும். இந்த நிலையில் சீனா இந்த நோயின் தீவிரத்தை பற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் உருவான கொரோனா பரவல் குறித்து ஜனவரி மாதம் தான் உலகிற்கு சொன்னது இதனால் தான் உலகம் முழுவதும் கொரோனா பரவ காரணம் ஆகும்.
இதை மறைப்பதற்கு இந்தியா சீனா இடையே எல்லை பிரச்னையை கிளப்பியது. இந்தியா மீது போர் தொடுப்பது போல் சீன் போட்டது. இதன் காரணமாக, சீன பொருட்களை புறக்கணிக்கும் மனநிலைக்கு இந்திய மக்கள் வந்துள்ளனர். இதற்கேற்ப, சீன ஆப்ஸ்களை நீக்க உருவாக்கப்பட்ட புதிய ஆப்ஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக, சீன பொருட்கள் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ள, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி), சீன பொருட்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய துவங்கியுள்ளது. இந்த அமைப்பில் 7 கோடி வர்த்தகர்கள் மறறும் 40,000 வர்த்தக சங்கங்கள் இணைந்துள்ளன.
முதல் கட்டமாக, அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 1,300 கோடி டாலர் (சுமார் ₹1 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3,000 பொருட்களை நிறுத்தி விடலாம். இவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என கூறியுள்ளது. தற்போது சீனாவிலிருந்து 7,000 கோடி டாலர் ₹5.32 லட்சம் கோடி பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.