Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Oredesam by Oredesam
July 27, 2024
in இந்தியா
0
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.  இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை மையமாகக் கொண்ட ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’  என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

வளர்ச்சியடைந்த பாரதம் 2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் மாநிலங்களின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும் கூட்டத்தில் இடம்பெறும்.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய அபிலாஷைகளுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்  என்ற தொலைநோக்கு பார்வையை அடைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை தேவைப்படும்.

9வது நிர்வாகக் குழு கூட்டம், மத்திய, மாநிலங்களுக்கு இடையே ‘டீம் இந்தியா’ என்ற குழுப்பணியை ஊக்குவித்து, இந்த தொலைநோக்குக்கான வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 டிசம்பர் 27-29 தேதிகளில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகள் மீதும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கவனம் செலுத்தும். ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற பொதுவான கருப்பொருளின் கீழ், தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து பரிந்துரைகள் செய்யப்பட்டன:

1.குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம்

2. மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை

3. சுகாதாரம்: அணுகல் தன்மை மற்றும் கவனிப்பின் தரம்

4. பள்ளிப்படிப்பு: அணுகல் மற்றும் தரம்

5.நிலம் மற்றும் சொத்து: அணுகல், டிஜிட்டல் மயமாக்கல், பதிவு

கூடுதலாக, சைபர் பாதுகாப்பு, முன்னேற விரும்பும் மாவட்டங்கள், தொகுதிகள் திட்டம், மாநிலங்களின் பங்கு, நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டன, அவை தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் உள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார் உறுப்பினர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.  மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அவதூறு வழக்கில் சஷி தரூர் ஆஜராகாததால் நீதிமன்றம் ரூ .5,000 அபராதம்

அவதூறு வழக்கில் சஷி தரூர் ஆஜராகாததால் நீதிமன்றம் ரூ .5,000 அபராதம்

February 15, 2020
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

April 10, 2021

CAAவிற்கு ஆதரவாக லண்டன் இளம் பெண்ணின் பேச்சில் அதிர்ந்து போன CAA எதிர்ப்பாளர்கள்.

March 9, 2020
KILAMBAKKAM

திராவிட மாடல் ஆட்சியில்.. பரிதவித்த பயணிகள்.. மூன்றாவது நாளாக மாறாத காட்சிகள்.. விஷ்வரூபம் எடுக்கும் கிளம்பாக்கம் பிரச்சனை!

June 7, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x