அமெரிக்கா! வல்லரசு! அதுவும் உலகின் முதல்நிலை வல்லரசு! தனிநபர் வருமானம் (PER CAPITA INCOME) மிகவும் அதிகம். அறிவியல் வளர்ச்சியில் உச்சம் தொட்ட நாடு. ஆனால் கொரோனா வந்தபோது என்ன நடந்தது? வாழத் தகுதியற்ற நாடு அமெரிக்கா என்பது நிரூபணம் ஆனது.
அமெரிக்க ஜனத்தொகை 33 கோடிதான். ஆனால் கொரோனா மரணம் அங்கு உலகிலேயே அதிகம். கொரோனா மரணத்தில் உலகில் முதல் இடம் அமெரிக்காவுக்கு. அங்கு கொரோனா மரணம் 7 லட்சம். கொரோனாவை வெல்ல முடியாமல் மண்ணில் வீழ்ந்தது அமெரிக்கா!
என்ன மண்ணாங்கட்டி வல்லரசு? என்ன பணக்கார நாடு? கொரோனா அமெரிக்காவை அடித்துத் துவைத்துக் காயப்போட்டு விட்டதே!இப்போது சொல்லுங்கள், அமெரிக்கா வாழத்தகுதியான நாடா? இல்லை!
பிரேசில்! இது ஒரு தென்னமெரிக்க நாடு. ஜனத்தொகை 19 கோடி. ஆனால் கொரோனா மரணத்தில் உலகிலேயே இரண்டாம் இடம்! 6 லட்சம் பேர் கொரோனாவால் மரணம்.கொஞ்ச நஞ்சமல்ல! ஆறு லட்சம் பிணங்கள்! பிரேசிலில் எங்கு பார்த்தாலும் போதை மருந்து! போதை மருந்து சாப்பிடாதவன் அங்கு இல்லை. விளைவு கொரோனாவில் ஆறு லட்சம் பிணங்கள்.
இந்தியாவுடன் ஒப்பீடு செய்து பார்ப்போம். அமெரிக்கா பணக்கார நாடு. இந்தியா ஏழை நாடு. BPL கூட்டம் இந்தியாவில் மிக அதிகம்.ஆனால் அமெரிக்காவில் ஏது BPL? (BPL = Below the Poverty Line) இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி. இங்கு கொரோனா மரணம் 4.5 லட்சம்.
33 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்காவில் கொரோனா மரணம் 7 லட்சத்து ஆயிரம் (7,01,000).ஆனால் 139 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் கொரோனாவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் கொரோனா மரணம் 4.5 லட்சம் என்று கட்டுக்குள் உள்ளது.அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி டொனால்டு டிரம்ப்பையு ம் ஜோ பைடனையும் நார் நாராகக் கிழித்துப் போட்டு விட்டது கொரோனா.சரி, கொரோனாவை விட்டுத் தள்ளுங்கள்!
வேறு parametersஐ எடுத்துக் கொள்வோம்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை பிறப்பிக்கப் பட்டுள்ளது. உணவு தானியங்கள் பதுக்கல்! விலைவாசி விண்ணைத் தொடுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ 200. ஒரு சிங்கிள் தேநீர் ரூ 100. பெருவாரியான ஸ்வீட் கடைகள் மூடப்பட்டு விட்டன.
பெரும் பணக்காரன் தன் குழந்தைக்கு ரூ 150 கொடுத்து ஒரு லட்டு வாங்கிக் கொடுக்கிறான்.இன்னொரு அண்டை நாடு ஆப்கானிஸ்தான். தலிபான்களின் ஆட்சி. மக்கள் நாட்டை விட்டு ஓடிக் கொண்டு இருக்கின்றனர்.
பாகிஸ்தான் உலகின் பிச்சைக்கார நாடு.நமது அண்டை நாடு. எந்த நேரமும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் உள்ள நாடு.பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு.பெட்ரோல் டீசல் கிடைக்காமல் மக்கள் அவதி.
சீனாவில் மின்சார வெட்டு. ஒரு நாளைக்கு 9 மணி நேர மின்வெட்டு.ஆக இத்தனை நாடுகளைப் பார்த்தோம்.அவை வாழத் தகுதியான நாடுகள் அல்ல. இந்தியா மட்டுமே வாழத் தகுதியான நாடு. இந்தியாவை விட மற்ற நாடுகள் வாழத் தகுதியான நாடுகள் என்று கருதுவோர் அங்கே சென்று வாழலாம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















