தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் நேற்றைய தினம் ஆளுநர் திரு.ரவி அவர்களை நேரில் சந்தித்த அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் தி.மு.க எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்களை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக பா.ஜ.,க தலைவர் அண்ணாமலை தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பாஜகவினர் ஆளுநரை சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்கள்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி தி.மு.க. – எம்.பி., பா.ஜ.க ஒன்றிய தலைவரை அடித்தது மட்டும் அல்லாமல், பொது மக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களை பறித்து சென்றிருக்கிறார்.
கடலுார் தி.மு.க., – எம்.பி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், எம்.பி.யும், அவரின் உதவியாரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த கடலுார், திருநெல்வேலி எம்.பி.,க்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதை ஆளுநர் கண்காணிக்க வேண்டும்.
ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, சுரங்க கொள்ளை என தற்போதே அராஜகம் தலைதுாக்குகிறது. அவற்றை ஆரம்பத்திலேயே சரிசெய்ய எச்சரிக்கை விட வேண்டும் என்று கவர்னரை சந்தித்து முறையிட்டு உள்ளோம். என கூறினார்.
திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குளும் கிரிமினல் வழக்குகள் பற்றியம் தமிழக ஆளுநரிடம் லிஸ்ட் கொடுத்துள்ளார்.அண்ணாமலை. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஆளுநர் நேரடியாக லஞ்ச ஊழல் குறித்து விசாரிக்கலாம் என்ற சட்டம் உள்ளதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவத்தை பெற்றுளளது. தகவலறிந்த திமுக அமைச்சர்கள் சற்று கிலியில் உள்ளார்களாம். மேலும் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விரைவில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
திமுக தரப்பில் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் மேலும் 83 எம்.ஏல்.ஏ மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது பற்றியும் அண்ணாமலை ஆளுநரிடம் லிஸ்ட் கொடுத்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















