காஞ்சிபுரம் மாவட்டம் இந்திரா நகர்,சின்னய்யங்குளம், சேர்ந்தவர் ஹேமாவதி கமலக்கண்ணன் இவரின் மகன்கள் கிருபாகரன் மற்றும் கிருபானந்தன் ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு டி2 பிரிவில் படித்து வருகிறார்கள் .
ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் வகுப்பு ஆசிரியராக ஆசிரியர் ஜாய்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கிருபாகரன் மற்றும் கிருபானந்தன் கழுத்தில் (ருத்ராச்சம்) கண்டமணியும், திருநீறும் அணிந்து பள்ளிக்கு செல்வது வழக்கம்
இந்த நிலையில் வகுப்பு ஆசிரியர் ஜாய்சன் கழுத்தில் (ருத்ராச்சம்) கண்டமணியும், திருநீறும் அணியக்கூடாது என்றும் பொறுக்கி, ரவுடிதான் அணிந்திருப்பான் சைவ சின்னம் அணிந்தவர் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று வகுப்பறைக்குள் நுழையவிடாமலும், மிக கொடுரமான முறையில் அடித்தும் இவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் முதுகில் முழங்கையால் குத்தியுள்ளார்.
அனைத்து மாணவர்களையும்அழைத்து தலையில் குட்ட சொல்லி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக இரு மாணவர்களும் பள்ளிக்கு செல்ல மறுக்கிறார்கள் பயமாக உள்ளது நாங்கள் பள்ளிகூடம் போகமாட்டோம் என கூறி பெற்றோர்களிடம் அழுதுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் வகுப்பு ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் அவர்கள் ஆசிரியர் ஜாய்சன் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வருக்கும், முதன்மை கல்வி இயக்குனர், முதன்மை கல்வி இயக்குனர், கல்வி அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்,காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர்,ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார்கள்.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















