திமுகவின் அராஜகம் தினமும் கடத்தல், கொள்ளை , கொலை என்று அனைத்து ரவுடித்தனத்தையும் குறையில்லாமல் செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல்லை திமுக எம்.பி மீது நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டது.
இதற்கடுத்து தி.மு.கவினருக்கு சோறு பஞ்சாயத்தைத் தவிர உலகில் வேறு பஞ்சாயத்தே இருக்காது போல.
ஓசி பிரியாணி கேட்டு பாக்ஸிங் செய்தது, பஜ்ஜி கடையில் அடாவடி செய்தது என்று உணவகங்களில் போய் தி.மு.க.வினர் ரவுடிசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. பிரியாணி கடையில் ஒரு தி.மு.க. நிர்வாகி ஓசி பிரியாணி கேட்டு பாக்ஸிங் செய்ய, அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளானது. பிரியாணிக்கெல்லாம் பாக்ஸிங் போடுவது கட்சி இமேஜுக்கு பெரிய டேமேஜை ஏற்படுத்தியதால், கட்சித்தலைவர் ஸ்டாலினே நேரடியாக பிரியாணி கடைக்குப் போய் மன்னிப்பு கேட்டார். இதே வரிசையில், லெக் பீஸுக்காக உணவக பணியாளரிடம் குஸ்தி போட்டிருக்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.
இந்த நிலையில் சிவகாசி, திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்த தலகருப்புசாமி மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தார். திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்ற தல கருப்புசாமி, மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டார்.
பின் பணம் கொடுக்காமல் புறப்பட்டார்.உரிமையாளர் குமார் பில் 220 ரூபாய் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு நான் திமுக காரன். என்னிடமே பில் கேட்கிறாயா, உன்னை தொலைத்து விடுவேன், என மிரட்டினார்.உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து விட்டு, பணம் கொடுக்காமல் நடையைக் கட்டினார்.
திருத்தங்கல் போலீசாரிடம் ஓட்டல் உரிமையாளர் குமார் புகார் தெரிவித்துள்ளார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















