சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா Meta என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகா அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடியாக அறிவித்துள்ளார். Facebook , Inc. என இருந்த ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றுவதாக வருடாந்திர ‘ஃபேஸ்புக் கனெக்ட்’ நிகழ்வில் அறிவித்தார் ஜுக்கர்பெர்க். சமூக வலைதள சேவையின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடரும் எனவும் அறிவிப்பு.
பேஸ்புக்கின் நிறுவனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் புதிய பயணமாக மெட்டாவெர்ஸ் என்கிற வெர்ச்சுவல் உலகத்தை உருவாக்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டது.
பேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக்கின் பெயர் Meta என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். எங்களது ஆப்கள், பிராண்டுகள் அப்படியே இருக்கும் அதில் எந்த பெயர் மாற்றமும் இல்லை என்றார்.

பேஸ்புக் தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்புடன் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது அடுத்த கட்டமாக மெடாவெர்ஸ்- Metaverse என்ற மெய்நிகர் உலகை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். விசுவல் ரியாலிட்டி (VR), ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மெடாவெர்ஸ் என்கிற இணைய மாய உலகம் உருவாக்கப்பட உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















