தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர். இவரின் முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1952 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார்.1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர். நரேந்திர மோடி பிரதமரான சில மாதங்களில் வடகிழக்கு மாநிலங்களின் உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.அங்கு சிறப்பாக செயல்பட்டு நாகலாந்து மக்களிடையே நற்பெயர் பெற்றார். மாவோயிஸ்ட்களின் கரத்தை கட்டுப்படுத்தினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் பல தேசவிரோத கும்பல்களுக்கு ஆதி வயிற்றில் புளியை கரைத்தது. இதனால் மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் வருகை விவாதம் செய்யப்பட்டது எந்த ஆளுநருக்கும் இல்லாத ஒன்று.
இந்த நிலையில் திமுக அரசு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. அதுவும் தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவி பதவி ஏற்ற பின்பு தடுமாற்றம் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முதலில் ஆளுநர் ரவி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் ஆளுநரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியே சந்தித்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசினர். மேலும் கோவில்களை திறக்க கோரி பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்பட்டன. இது திமுக அரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதுவும் அரசுக்கு எதிரான ஆளுநரின் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.மேலும் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் திமுவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் திமுக எம்.பி.கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் அராஜகம் கொலைகள் அதிகரிப்பு என திமுக அரசுக்கு பல பின்னைடைவுகளை ஏற்படுத்தியது.
இதன் பின் அதன்பிறகு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் பற்றிய விவரங்களை தனக்கு தயாரித்துத் தருமாறு ஆளுநர் ரவி மாநில தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு எழுதிய கடிதமும் பெரும் பேசுபொருளாக மாறியது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தன.கடந்த காலங்களில் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இதுபோன்ற செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தற்போது ஆளுநர் அறிக்கை கேட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த திமுக தற்போது அதை செயல்படுத்தி உள்ளது. புதிய கல்வி கொள்கையின் ஒன்று இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு செய்லபடுத்தியுள்ளது.
ஆட்சியில் இல்லாதபோது திமுக வீர வசனம் பேசும். ஆட்சிக்கு வந்துவிட்டால் அப்படியே பேச்சு மாறிவிடும். ஆட்சியில் இல்லாதபோது ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார்கள். தற்போது ஆளுநர் அலுவலகத்திற்கே உருண்டு செல்வார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதற்கு திமுக அரசு தயாராகி விட்டதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் இருக்கும் என்று சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்து கூறியிருக்கிறார். அதனால் இனி மத்திய பாஜக அரசுக்கு திமுக வளைந்து கொடுத்து செல்வதுடன் சற்று அடக்கி வாசிக்க விரும்பும் என்றே கருதத் தோன்றுகிறது” என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இதெல்லாம் நடக்கும் என திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கவில்லை!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















