தவ்ஹீத் ஜமாத் இந்துக்கள் பண்டிகையில் தலையிட தவ்ஹீத் ஜமாத் யார் ?
நாளை மறுநாள் உலகம் முழுவதும்இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும்
ஒரு நாள் தான் இருப்பதால் புத்தாடைகள் வாங்கவும், இதர பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்த வண்ணம் இருக்கிறார்.
அதுவும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத அளவு மக்கள் கூட்டம் கடைவீதிகளில் அலை மோதுகிறது.இந்த நிலையில் தான் இசுலாமிய அமைப்பு இந்து மத பண்டிகைகள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள்.
தற்போது பாட்டாசுகள் வெடிப்பது குறித்து சர்ச்சையான போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்கள். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் : தீமையைத் தரும் பட்டாசை தவிர்ப்போம் உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள் நன்மை செய்யுங்கள் நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான் வீண்விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புகள் ஆக உள்ளனர் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான் பணத்துக்கும் மனித இனத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பட்டாசை தவிர்ப்போம், என சர்ச்சையான போஸ்டரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள்
இந்த சம்பவம் இந்துக்கள் இடையே பெரும் சலசலப்பை அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மற்ற மத நம்பிக்கையில் இதுபோல செய்பவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முஸ்லிம் மதவெறி அமைப்பு க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டுள்ளது. !
முஸ்லிம் மதவெறி அமைப்பு இந்துக்களின் பண்டிகை,பழக்க வழக்கங்களில் தலையிட்டால் அதேபோல் இவர்கள் பண்டிகைகள் குறித்தும் இந்துக்கள் கருத்துக்கூற வேண்டிவரும். இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது. என எச்சரிக்கை விடுத்துள்ளார்