தமிழகத்தில் தி.மு.க-அ.தி.மு.க என்ற நிலை மாறி தி.மு.க-பா.ஜ.க என்ற அரசியல் களம் மாறியுள்ளது. திமுக அரசின் மீது தினம்தோறும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மின்சார துறையில் நடக்கவிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிகொண்டுவந்தார். இந்த சம்பவம் தி.மு.கவை அதிர செய்தது.
அடுத்து போக்குவரத்து துறையில் தீபாவளி ஸ்விட் டெண்டரில் நடைபெறும் ஊழலை வெளிகொண்டுவந்தார். அண்ணாமலை அதன் பின் டெண்டர் ரத்து செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.மேலும் ஆவினில் இந்த ஆண்ட்ரு அமோக அளவில் ஆர்டர் குவிந்துள்ளது. இது அண்ணாமலை செய்த புரட்சி என்று கூட சொல்லலாம். ஆனால் இதை பற்றி வாய் திறக்கவில்லை ஊடங்கங்கள்.
அடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோரிக்கை வைத்தாலும் அதை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றி வருகிறது. அதில் முக்கியமானது அனைத்து நாட்களிலும் கோவில்கலை திறக்க வேண்டும் என பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தார். அந்த ஆர்ப்ட்டத்தில் 10 நாட்களுக்குள் திமுக அரசு முடிவு எடுக்காவிட்டால் அரசினை ஸ்தம்பிக்க வைப்போம் என கூறினார். ஆனால் 8 நாட்களில் அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு.
அடுத்ததாக ராமேஸ்வரத்தில் தீர்த்த கிணறுகளை திறக்க கோரிக்கை வைத்தார் அண்ணாமலை அடுத்த நாளே தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கை முறையை தமிழகத்தில் நடைமுறைபடுத்த ஆரம்பித்துள்ளது தி.மு.க அரசு,தமிழகத்தில் தி.மு.கவின் போக்கு மாறியுள்ளது பாஜகவின் பிடியில் திமுக போகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கையால் திமுகவின் வேகம் குறைந்துள்ளது. திமுக மீதான ஊழல் புகாரினை தொடர்ந்து திமுக வேகம் குறைந்துள்ளது. மேலும் ஆளுநரும் திமுக அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளார். எந்த திட்டத்தை எடுத்தாலும் ஊழல் கமிஷன் புகார்கள் தான் வருகிறது. அதன் பின் தான் அரசு நல திட்டங்கள் குறித்து செயல்பாடுகளை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்
தற்போது தி.மு.க அமைச்சர்கள் பாஜக மீதான விமர்சனங்களை விடுத்து டெல்லிக்கு பறக்கிறார்கள் சத்தமில்லாமல் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க – திமுக அமைச்சர்கள் இடையே காரசாரமான விமர்சனங்களும் விவாதங்களும் நடந்துகொண்டிருந்தாலும் திமுக அமைச்சர்கள் சந்தமில்லாமல் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநிலத்தில் தங்கள் துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக அரை டஜன் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தங்கள் துரை ரீதியான கோரிக்கைகளை சமர்ப்பித்து திட்டங்களுக்கு நிதி கோரி உள்ளனர்.தமிழக அமைச்சர்கள். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து திமுக ஆட்சி அமைந்த தொடக்கத்தில், சில வாரங்கள் பாஜகவினருடன் சண்டை போடும் மனநிலையில் இருந்த, மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாமதமாக நிதானத்தை கடைபிடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு செய்தது போல், பாஜகவில் யாரையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்ய வில்லை. மத்திய அரசை விமர்சித்த தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து வழங்கும் நிலைக்கு சென்றுள்ளார்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நர்ப்புற வளர்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “நாங்கள் ஏன் பாஜக தலைவர்களை தேவையில்லாமல் வசைபாட வேண்டும்? நமது அமைச்சர்கள் மாநில நலனுக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர். இதில் ஒன்றும் தவறில்லை. அதற்காக பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.என்று பட்டும் படாமல் பேசிவிட்டு நழுவி வருகிறார்கள்.