கர்நாடகாவில் அதிரடி போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை பாஜகவில் இணைத்து முதலில் அவருக்கு மாநில துணைதலைவர் என்றபொறுப்பை வழங்கினார்கள்.அதன் பின்பு பல மூத்த நிர்வாகிகள் இருந்த போதிலும் அதிரடியாக அவருக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக தறப்பொழுது
பா.ஜ.,வின் உட்கட்சி அமைப்பில் அதிகாரம் மிக்கது தேசிய செயற்குழு. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின், கொரோனா பரவல் காரணமாக, பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூடவில்லை.
இந்நிலையில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் வரும் ௭ம் தேதி நடக்கிறது.கொரோனா பரவல் காரணமாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள், டில்லியை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே, கூட்டத்தில் நேரடியாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மற்ற உறுப்பினர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்தபடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக பங்கேற்கின்றனர்.
கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்புரையாற்றுகின்றனர்.இக்கூட்டத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் பற்றி விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ள, உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தமிழகத்திலிருந்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழக அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பொதுச் செயலர்கள் நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், சீனிவாசன், ஜி.கே.செல்வகுமார், கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்க வேண்டும். இதில் கே.டி.ராகவன் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
நயினார் நாகேந்திரன், சட்டசபை பா.ஜ., தலைவர் மற்றும் கன்னியாகுமரி மண்டல தலைவராக உள்ளார். இவர்கள் இருவரைத் தவிர, ஏழு பேர் மட்டும் தான் பங்கேற்கும் நிலை உள்ளது.மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவித்தால்தான், அதில் இடம்பெறும் பொதுச்செயலர்கள், தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க முடியும். எனவே, 6ம் தேதிக்குள் மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியில் எழுந்துள்ளது.
எதுநடந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி:-தினமலர்.