பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் தலைவர்கள் சந்திப்பு ஆகியவற்றை நிறைவு செய்தர். இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த அக்டோபர் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்றார். அடுத்ததாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை பாராட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார் ” இந்த பருவ நிலை மாற்றத்தை கையாள ஒருவர் இருக்கிறார். ஒரு மணி நேர சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி இந்த உலகத்திற்கு ஒரு வருடம் மின் சக்தியை பெற முடியும் என்று புரிந்து கொண்டவர் . அவர்தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி ” என இந்தியர்கள் பெருமைபடும் வகையில் இங்கிலாந்து பிரதமர் பேசினார்.
அதே மாநாட்டில் கலந்து கொண்ட மேற்காசிய வல்லமை பொருந்திய நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னெட் நேற்று சந்தித்தார். சந்திப்பின் போது இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட், பிரதமர் மோடியை எங்கள் கட்சியில் இணையுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் மோடியை கொண்டாடிவருகிறார்கள். உள்நாட்டில் இருந்து கொண்டு வெளிநாட்டில் பணம் பெற்றுக்கொண்டு அலையும் சில பேர் மோடியை தூற்றி வருகிறார்கள்.
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
பொருள்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்
போன்றது அவர் நட்பு.
ஓளவையார் கூற்று தான் நியாபகம் வருகிறது.