தமிழகத்தில் இந்து மாணவ மாணவிகளை கிருஸ்துவ பள்ளிகள் தொடர்ந்து இழிவுபடுத்துவது தொடர்கைதையாகி வருகிறது. மேலும் அரசின் உதவி பெறும் கிருஸ்துவ பள்ளிகள் தான் இந்து மாணவர்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் கிருஸ்துவ பள்ளியான ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜாய்சன் கழுத்தில் (ருத்ராச்சம்) கண்டமணியும், அணிந்து வந்த மாணவர்களைருத்ராட்சம் அணியக்கூடாது என்றும் பொறுக்கி, ரவுடிதான் அணிந்திருப்பான் சைவ சின்னம் அணிந்தவர் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று வகுப்பறைக்குள் நுழையவிடாமலும், மிக கொடுரமான முறையில் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். விவகாரம் இன்னும் முடியாத நிலையில்
மற்றொரு அரசு உதவி பெறும் கிறிஸ்தவப் பள்ளியில், மாணவிகள் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் இட்ட மாணவியை, இழிவுபடுத்தியுள்ளார்கள். தென்காசி மாவட்டத்தில் இயங்கும் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் கலைவாணி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கலைவாணி மாணவி. இறைநம்பிக்கை உடையவர் அவர் பள்ளிக்கு செல்லும் போது நெற்றியில் திருநீறு மற்றும் நமது பெண்களின் பாரம்பரிய வழக்கமான குங்குமப்பொட்டு வைத்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அரசு உதவி பெறும் பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளிகலைவாணியை இந்து மத அடையாளங்களுடன் வருவதினை பார்க்க பொறுக்க முடியாமல் கீழ்த்தரமான செயலை அரங்கேற்றி உள்ளது கலைவாணியிடம் அப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள், நெற்றியிலுள்ள திருநீற்றையும், பொட்டையும் அழிக்குமாறு கண்டிக்கும் வகையில் கட்டளையிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மிரட்டலுக்கு அந்த மாணவி பணியவில்லை அதுபோல நெற்றியில் உள்ள திருநீறையும் குங்குமத்தையும் அழிக்க மறுத்துவிட்டார் . பிரச்சனை பெரிதாகியது. கிருஸ்துவ பள்ளி நிர்வாகம் இந்த கலைவாணியை தொடர்ந்து வற்புத்தி வந்துள்ளார்கள்.மேலும் சக மாணவிகளை வைத்து அந்த குங்குமப் பொட்டையும் திருநீறு அழிக்க வைத்துள்ளனர் கலைவாணி அவளது பெற்றோரிடமும், ஊர் மக்களிடமும் தனக்கு நேர்ந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோரும், ஊர் மக்களும், தென்காசி மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் பா.ஜக பொறுப்பாளர் கந்தசாமி ஆகியோரது உதவியுடன்,அந்தக் கீழ்த்தரமான செயலை அரங்கேற்றிய கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
source : கதிர் செய்திகள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















