மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமிமத்திய அரசின் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, நவோதய பள்ளிகளுக்கு ஆதரவலா தெரிவித்து வருபவர்.
மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தராக இருக்கும் கிருஷ்ணனின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிகிறது. பல்கலைகழகம் விதிப்படி புதிய துணை வேந்தரை நியமிக்க தமிழக அரசின் சார்பில் தேர்வு செய்யும் தேர்வுக் குழு அமைக்கும். இதற்கான பணியினை கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் திமுக விடியல் அரசு கிடப்பில் போட்டது. இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
கடந்த மாதம் 30 ஆம் தேதி தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மத்தியஅரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை, மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு, கல்வித்தரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிதுள்ளார்.
இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமியை ஆளுநரின் பரிந்துரையின் படி தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பாலகுருசாமி நீட், புதிய கல்விக் கொள்கை, நவோதய பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஆவார். இதற்கெல்லாம், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும்போது அவரை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய கல்வி கொள்கையின் ஒருபகுதி இல்லம் தேடி கல்வி இதை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் புதிய கல்வி கொள்கைகளை எதிர்ப்பு தெரிவித்திருந்த வந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதை எல்லாம் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
புதிய ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டத்திலிருந்தது திமுக அரசு மத்திய அரசினை பகைத்து கொள்ளாமல் நடந்து வருவது குறிப்பிடதக்கது.
பல்கலைக்கழகத்தின் விதிப்படி துணைவேந்தர் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன் புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். தேர்வுக் குழுவில் இடம் பெறும் சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பணியை தொடங்க வேண்டும். 4 மாதங்களுக்குள் நடவடிக்கை முடிந்து புதிய துணைவேந்தர் பதவிக்கான தகுதியுள்ள மூன்று பேர் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆளுநரின் பரிந்துரை என்பது தான் முத்திரை. தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று ரவி நிரூபித்து உள்ளார். தன்னாலும் வளைந்து கொடுக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து உள்ளார்.என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















