பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன. அக்டோபர் 6ம் தேதி, பெரியசாமி கோவிலில் 10 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை உட்பட ஒன்பது சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை, சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் உட்பட மொத்தம் 14 சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து, சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவரை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் ஜாமினில் சென்ற நிலையில், அக்டோபர் 27ல், மீண்டும் பெரியசாமி கோவிலில், ஐந்து சிலைகள் உட்பட 18 சிலைகள், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. இதையடுத்து, கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அறநிலையத் துறை சார்பில், இரு காவலர்களும் நியமிக்கப்பட்டனர். போலீசாரும் அவ்வப்போது, ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூன்றாவது முறையாக, பெரியசாமி கோவிலில் 15 அடி உயர குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாககன்னி சிலை உட்பட இரண்டு சிலைகள். பெருமாள் கோவிலில் 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயர பொன்னுசாமி சிலை உட்பட மொத்தம் ஒன்பது சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்ததால், காவலர்கள் இருவரும் பணிக்கு செல்லவில்லை எனவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது. ‘மழையால், சிக்னல் கிடைக்காமல் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை; அது சரியானதும், பதிவுகளை ஆய்வு செய்தால் குற்றவாளி யார் என்பது தெரியவரும்’ எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ‘அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தொடர்ந்து மூன்று முறை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அறநிலைய துறை அதிகாரிகளும், போலீசாரும் மெத்தனமாக உள்ளனர்’ என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனை அடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்த இந்த மலை கோவில் உள்ள இறைவனின் திருமேனிகள் அடித்து நொறுக்கப்பட்டு உடைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
இதற்குக் காரணம் நாத்திகவாதிகளா? அன்னிய மத அடிப்படைவாதிகளுக்கு குனிந்து சேவகம் செய்யும் திமுக ஆட்சியா? இந்துக்களை இழித்துப் பழித்துப் பேசி, இந்து மதத்தை சிறுமைப்படுத்தும் கும்பலுக்கு துணை போகும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே இதுபோன்ற மிகவும் அதிர்ச்சிகரமான செயல்கள் நடக்கின்றது.
என இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் தனது கண்டனைகளை தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















