தமிழக பாஜகவில் அதிரடி பெண்ணை மாவட்ட தலைவராக அறிவித்து அதிரடி காட்டும் அண்ணாமலை.
தமிழக பாஜகவில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றார். மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார். இளம் வயதில் மாநில தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வரும் அண்ணாமலை அவர்கள் தான் தற்போது தமிழக மீடியாக்களில் ஹாட் டாபிக். அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது 8 மாவட்ட தலைவர்களை மாற்றி அதிரடி அறிவிப்பினை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது தமிழக பாரதிய ஜனதா கட்சி கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் எனவும் புதிய மாவட்ட தலைவர்கள்.
மதுரை மாநகருக்கு திமுகவிலிருந்து தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணனையும், திருச்சி மாநகருக்கு ராஜசேகரன், திருச்சி புதுநகர் அஞ்சாநெஞ்சன்,கரூர் மாவட்டத்திற்கு செந்தில்நாதன்,பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வராஜ்,விழுப்புரம் மாவட்டத்திற்கு ராஜேந்திரன்,செங்கல்பட்டு மாவட்டத்தில் வேதா சுப்பிரமணியம்,-கோயம்புத்தூர் வடக்கு மாவட்டத்திற்கு சங்கீதா ஆகியோரை மாவட்ட தலைவராக நியமித்துள்ளார். அண்ணாமலை .
அதேபோல் மாவட்ட பார்வையாளர்களாக திருச்சி நகர் லோகிதாஸ், ராமநாதபுரம் நாகேந்திரன் ஆகியோரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக சீனிவாசன். ராஜேஷ்குமார், ராஜேந்திரன். சிவசாமி,சந்திரசேகரன். விழுப்புரம் மாவட்ட தலைவராக இருந்த கலிவரதன்,பலராமன், ஜெகநாதன் சேது அரவிந்த் ஆகியோரை மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளர்கள். இதை அதிகார்பூர்வமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திமுக போன்ற பலம் வாய்ந்த கட்சியில் மாவட்ட தலைவராக பணம் பலம் வாய்ந்தவர்களாகவும் மேலும் பல மாவட்ட செயலாளரார்கள் தற்போது அமைச்சராக உள்ள நிலையில் அவர்களை அதிமுகவே சமாளிக்க முடியாத நிலையில் உள்ளது ஆனால் அண்ணாமலை பாஜகவில் ஒரு பெண்ணை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல மாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அளவில் துணைத்தலைவர் பொதுச்செயலாளர் பதவிகள் காலியாக உள்ளது. எனவே மேலும் பல அதிரடி மாற்றங்கள் தமிழக பாஜகவில் இருக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றது. இந்த மாற்றம் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தாயார்படுத்துவதற்கு என கூறுகிறார்கள்.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















