வடகிழக்கு பருவமழையானது கடந்த 1 வாரம் தமிழகத்தை துவம்சம் செய்து வருகிறது.தற்போது சென்னையில் மழை ஓய்ந்தாலும் கன்யாகுமரியில் வெளுத்து வாங்குகிறது.சென்னை முழுவதும் படகுகள் காணப்பட்டது. மழையில் சென்னை மிதக்க திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என அனைத்து கட்சிகளும் விடியல் அரசின் மீது குற்றம் சாட்டினார்கள்.
மேலும் 2015ம் ஆண்டு அரசுக்கு கை கொடுத்த தன்னார்வலர்கள் இப்போது காணாமல் போயிருக்கிறார்கள்அதிரைக்கு காரணம் திமுக அரசின் அடாவடி நடவடிக்கை தன்னார்வளர்களை அவர்களின் இஷ்டப்படி செயல்பட விடமாட்டார்கள் என்று கருதி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரவில்லை.
சென்னை மட்டுமல்ல திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை என பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்வதால் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் : திமுக அரசின் தவறை மறைக்க மத்திய அரசை குற்றம் சாட்டினார் அமைச்சர்.ஆண்டுதோறும் தமிழகத்துக்கு மத்திய அரசானது பேரிடர் நிவாரண நிதியாக 1350 கோடி ரூபாய் அளிக்கும். 2020 – 2021ம் ஆண்டுக்கான நிதியில் இன்னமும் 300 கோடி ரூபாய் பாக்கி உள்ளது என்று கூறி இருந்தார்.
பொதுவாக பார்த்தால் மத்திய அரசு தமிழகதிற்கு பேரிடர் மேலாண்மை நிதியை தராமல் இருப்பது போன்ற எண்ணம்ஏற்படும். ஆனால் அது அப்படி அல்ல என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை பங்கம் செய்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது குறித்து அண்ணாமலை: மத்திய அரசின் பங்கான ரூ 1020 கோடியை மத்திய அரசு தந்துவிட்டது. நீங்கள் சொல்லும் ரூ 300 கோடி, தமிழக அரசின் பங்கு. அதை முதலமைச்சரிடம் கேட்கவும் என அமைச்சரை ஆதாரத்துடன் பங்கம் செய்துள்ளார். அண்ணாமலை
அண்ணாமலை பதிவிட்ட பதிவில் தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்கு தொகையான 1020 கோடி ரூபாயை விடுவித்து விட்டது என்றும், பாக்கிதொகை தமிழக அரசு தான் தர வேண்டும் என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே! தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்! இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி! 2020-21 ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி-1,360 கோடி! இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை
ஜூலை 31 ஆம் தேதி அளித்துவிட்டது!
நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம் முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்! உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன்! என கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை இணைத்துள்ள ஆவணத்தை உற்று நோக்கினால் தமிழக அரசு நிதியை விடுவிக்கவில்லை என்பது புலப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















