உலக சுகாதார அமைப்பு எங்களது கோவாக்ஸினுக்கு அனுமதி கொடுக்க தயங்கியதற்கு முக்கிய காரணம் இந்திய ஊடகங்கள் கோவாக்ஸின் பற்றி எதிர்மறை விமரிசனங்கள் செய்ததே என கோவாக்ஸின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா நேற்று ஒரு நிகழ்ச்சியில் சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
கோவாக்ஸினுக்கு எதிராக புரளிகிளப்பியதில் முக்கியமானவர்கள் பல ஊடங்களுக்கும் பங்குண்டு. மேலும் பல அரசியல்வாதிகளும் இந்திய தடுப்பூசிக்கு எதிராக விமர்சனங்கள் வைத்தார்கள். பிரதமர் மோடி ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றார் திருமாவளவன்! முதல்வர் எடப்பாடிபழனிசாமி பிரதமர் மோடியும் சேர்ந்து கொரனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் – ஸ்டாலின்!
பிரதமர் மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்ய தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் கம்யூனிஸ்ட்கள்! எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார் ராகுல்காந்தி! கொரனா தடுப்பூசியின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் கனிமொழி! தமிழ்நாட்டின் கோபாலபுர ஊடகங்கள் பலவும் கோவாக்ஸினுக்கு எதிராக புரளி கிளப்பின.
கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது 6 மாதம் கழித்து தான் அனுமதி கிடைத்துள்ளது.
“உலக சுகாதார நிறுவனத்தில், மற்ற தடுப்பூசிகளை விட கோவாக்சின் அதிக சோதனைகளை எதிர்கொண்டது. இறுதியில் நாம் வென்றது நல்ல விஷயம். இது செயல்முறையைப் பற்றியது அல்ல. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி பற்றி நாட்டில் உள்ள எதிர்மறைவாதிகளால் கூறப்பட்ட பல்வேறு விஷயங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் இருமடங்கு உறுதியாக இருக்க விரும்பினர். தீவிரமாக மதிப்பாய்வு செய்யவும் அவர்கள் விரும்பினர். ஒவ்வொரு சிறிய பிரச்சனையும் அவர்களுக்குப் பெரிய விஷயமாக மாறியது.என பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
ஃபைசர், மாடர்னா, சீனோவக்ஸ் உள்ளிட்டவற்றிற்கு வெறும் இரண்டு வாரங்களில் அனுமதி கொடுத்த உலக சுகாதார அமைப்பு, கோவாக்ஸினுக்கு 6 மாதங்கள் எடுத்துக் கொண்டது. கோவாக்ஸினின் தரவுகளை பார்க்காமல் ஊடக புரளிகளை ஏன் உலக சுகாதார அமைப்பு கணக்கில் எடுத்துக் கொண்டது என்பது புரியாத புதிர்.