பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய முயற்சியை மோடி எடுத்துள்ளார். இது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, 77 அமைச்சர்களும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, 2014ல் முதலில் பதவியேற்றது. ஆட்சி பொறுப்பேற்றதும், நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளில் மோடி தீவிர கவனம் செலுத்தினார். சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது என, மத்திய அமைச்சர்கள் முன்னுதாரணமாக செயல்பட்டனர்.அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, நிர்வாக திறனை மேம்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன.
இதைத் தவிர பல்வேறு துறை நிபுணர்களும், அரசின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். அமைச்ர்களின் செயல்பாடுகள் நேரடியாக கண்காணிக்கப்பட்டன. நேர்மையான அதிகாரிகள், தங்கள் திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி, நிர்வாகத்தை மேம்படுத்த உதவி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த, செம்மைபடுத்த, புதிய அணுகுமுறையை மோடி மேற்கொண்டுஉள்ளார்.
இது குறித்து மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் குழுக்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில மாதங்களாக ‘சிந்தன் ஷிவர்ஸ்’ எனப்படும் ஆலோசனை, ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். இதில், ஒவ்வோர் அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த விபரங்களை விளக்கும்படி கூறப்பட்டனர். மேலும், நிர்வாகத்தை மேம்படுத்த ஆலோசனைகளும் கேட்கப்பட்டன.
கடைசியாக நடந்த கூட்டத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவரான, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றனர்.அதைத் தொடர்ந்து 77 அமைச்சர்களும் எட்டுக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, விரைவாக செயல்படுத்துவது, மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவது, தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்துவது என, ஒவ்வொரு குழுவுக்கும் இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதை திறம்பட செயலாற்ற, அந்தந்த துறையில் நிபுணத்துவம் உள்ள, ஆர்வம் உள்ள இளம் நிபுணர்களை பணிக்கு எடுத்துக் கொள்ளவும், இந்தக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.தேவைப்படும் இடத்தில், துறை சார்ந்த நிபுணர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹர்தீப் சிங் பூரி, நரேந்திர சிங் தோமர், பியுஷ் கோயல் போன்ற அமைச்சர்கள் அந்தந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இவர்கள் குழுவின் முடிவுகளை தங்கள் துறைகளில் முதலில் செயல்படுத்துவர். அதன் வெற்றியை அடுத்து, மற்ற அமைசச்கங்களுக்கும் பரிந்துரைப்பர்.இந்த குழுவில் சிலமாதங்களுக்கு முன்னாள் பொறுப்பேற்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் முருகனும் உள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு குழுவும், மற்றக் குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதன்படி, அனைத்து அமைச்சர்களும், ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் அமைச்சருக்கும் தங்கள் துறை சார்ந்த அனைத்து விஷயங்களும் தெரிந்து செயல்பட முழு வாய்ப்பு கிடைத்துள்ளது.இதன் வாயிலாக மிகவும் வெளிப்படையான, திறமையான நிர்வாகத்தை வழங்குவதே மோடியின் இலக்கு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















