தமிழ் சினிமா உலகில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு முன்னேறியவர் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். சபாபதி என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இப்படமானது காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரித்திருக்கிறார். இயக்குனர் ஆர் ஸ்ரீநிவாச ராவ் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நவம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சந்தானம், குக் வித் கோமாளி புகழ், நகைச்சுவை நடிகர் எம்எஸ் பாஸ்கர், சாயாஷி உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.என கூறி வன்னியர் சமூகம் கொந்தளித்துள்ளது. தியேட்டர்களில் சூர்யா படம் ஓடினால் அதை தடுத்து நிறுத்துகிறார்கள் வன்னிய சமூக மக்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஈ.வே.ரா குரூப். சந்தானம் வன்னியர் சமூகத்தை சேந்தவர் என்பதனால் தேவையில்லாமல் எதிர்ப்பை தெரிவித்துள்ளது இந்த ஈ.வே.ரா டீம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் படம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் நடிகர் சந்தானம் நடித்து திரையரங்கிற்கு வர உள்ள சபாபதி என்ற திரைப்படத்தின் விளம்பர போஸ்டரில் தண்ணீர் திறந்துவிட ஆர்ப்பாட்டம் அனைவரும் திரண்டு வருக என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த வாசகத்தின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல காட்சிப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு உடனடியாக திரைபடத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் இந்த மாதிரி காட்சிகளை வெளிகூடாது என்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்துகின்றனர். அதிலும் உடனடியாக அந்தத் திரைப்படத்தில் இந்தக் காட்சியை நீக்க வேண்டும். வெளியிட்டிருக்கின்ற போஸ்டர்களை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்கள் அனைவரும் திரையிடப்படும் திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம் என்பதை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துக் எச்சரிக்கை அறிவித்து உள்ளார்.
இவர் சொல்வது போல் போராடுபவர்களுக்கு அவமரியாதை என்றால் இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக எத்தனை படங்கள் வெளிவந்துள்ளது.அதை எல்லாம் தடை செய்யமுடியுமா. ஏன் விவேக் நடித்த படங்களில் இது போல் எத்தனை காட்சிகள் உள்ளது என்பதை இவர்கள் கவனித்தது இல்லையா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றது. மேலும் ஜெய் பீம் படத்தின் பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் செயல்படுவதாக கூறிவருகிறார்கள்.