தமிழகத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இருந்துவந்தார் இவர் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உத்திர பிரேதேசத்திலிருந்து ஒருவர் இங்கே வரப் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் – இடமாற்றம் சம்பந்தமான அதிகாரம் படைத்த ‘கொலிஜியம்’ என்பது மூத்த நீதிபதிகள் (4 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்டது) அமைப்பு சென்ற மாதத்தில் கூடி, ஏற்கெனவே பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் 28 பேரை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக மாற்றும்படி மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக 15 பேரையும், இரண்டாம் கட்டமாக 7 பேரையும் ஊர் மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கி, ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டு விட்டன சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டஉச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆளுநர் மாற்றப்பட்டார், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டார். அதன் பின் தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறிவிட்டது. திமுகவின் பாஜக எதிர்ப்பு அப்படியே அமுங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மாற்றம் தமிழகத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிக்கு பதில் எந்த நீதிபதி வருவார் என்ற பயத்தில் தமிழக போராளிகள் தலைமை நீதிபதி மாற்றத்திற்கு போர்க்கொடி தூக்கினார்கள் அதுவும் வீரமணி மிகப்பெரிய கண்டன அறிக்கை விட்டார். அப்போதே தெரிந்து விட்டது அடுத்த தலைமை நீதிபதி பல அதிரடியை நிகழ்த்த வருகிறார்.
உத்திர பிரேதேசம் பிரயக்ராஜ் {அலகாபாத்} உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க என்று உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
பல மக்கள் நலத்திட்டங்கள் போராளிகள் என்ற பெயரில் வழக்கை போட்டுவிட்டு வாய்தா மேல் வாய்தா வாங்கி மக்கள் நல திட்டங்களை கொண்டு வர முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அது கிடப்பில் உள்ளது. தேசத்திற்கு எதிராக பேசியவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் இவர்களை எல்லாம் களை எடுக்க புதிய நீதிபதி உதிர்ப்பிரேதேசத்திலிருந்து புதிய தலைமை நீதிபதி தமிழகத்திற்கு வருகிறாராம். இதனால் தான் போலி போராளிகள் நடுக்கத்தில் உள்ளார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















