தமிழகத்தில் மதமாற்றம் கும்பல்களின் வக்கிர எண்ணங்களால் சாதி மத மோதல்கள் உருவாகும் நிலையில் உண்டாகியுள்ளது. தங்கள் மதம் தான் பெரிது என்பதற்காக மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகளையும் அவர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள். இது எங்க போய் முடியும் தெரியாத நிலையில் கடைகள் அதிகமாக வைத்திருக்கும் சாதியினரை பற்றி தவறாக சித்தரித்து பேசிய சி.எஸ்.ஐ பெண் போதகர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ உயிர்ந்தெழுந்த மீட்பர் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தில் போதகர் பியூலா செல்வராணி என்பவர் தேவ செய்தி கொடுப்பதாக பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார்.பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்று பேச்சை தொடங்கிய அவர், பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றார். தனது கணவர் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும் , இருந்தாலும் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், ஆண் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல பெண் ஆசிரியைகளிடம் இருந்தும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக நாடார் சாதியின பெயரை சொல்லி அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக பேசியதால் சர்ச்சை உண்டானது.
பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாடார் மகாஜன சபை மற்றும் பல்வேறு வியாபார அமைப்புகள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில்,வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பியூலாவை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து கையில் மைக் இருக்கிறது என்று சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய போதகர் பியூலா மீது ஜாமீனில் வெளியே வர இயலாத 5 சட்டபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பியூலாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.