தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆடைகளை கழட்டி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பீர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. எந்த ஒரு கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும் போராட்டங்கள் நடத்தவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் வீராணர் கீழத்தெருவில் வசித்து வருபவர்சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் வந்த சதீஷ்குமாருக்கு, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரை பார்க்க தொண்டராம்பட்டு கிராமத்திற்கு வந்திருந்தனர்.
தொண்டராம்பட்டு கிராமத்திற்கு வந்த சதிஷ் குமார் அங்கு வந்திருந்த உறவினரை பார்த்துள்ளார். அங்கு காரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். கார் போக்குவரத்து இடையூறாக இருப்பதால் ரிவர்ஸ் எடுத்து ஓரமாக நிறுத்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அவரது உறவினரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கு இருந்த சில இளைஞர்கள் ஏன் இரு சக்கர வாகனம் மீது காரை மோதினாய் என கேட்டு உள்ளனர்.
அதற்கு சதீஷ் இது தனது அண்ணன் இருசக்கர வாகனம் தான் என கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ் தெரிவித்தார்.
அப்போது நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞனா என கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை கேட்ட உறவினர் மற்றும் தந்தையையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, படுகாயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source: tamil asianet news.